விலக்கப்பட்டவர்கள்
December 18, 2008 – 12:05 am
கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் ‘அம்சம் அதிகாரி’ வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய வருவாய் வட்டம் போல. அது அப்பகுதிக்கான நீதிபதி வேலையும்கூட. அவர் திருமணம்செய்துகொண்டது இரிஞ்ஞாலக்குடா வட்டபறம்பில் மீனாட்சி அம்மாவை.
1903ல் திரிச்சூர் அருகே உள்ள குந்நங்குளம் என்ற ஊரில் இருந்த ஒரு நம்பூதிரி மனையில் வாழ்ந்த விதவையான ஒரு நம்பூதிரிப்பெண் கருவுற்றாள். அக்காலத்தில் நம்பூதிரிப்பெண் முறைதவறியதாகத் தெரிந்தால் ஸ்மார்த்த விசாரம் என்ற பேருள்ள ஒரு விசாரணைக்கு ஆளாக்கப்படுவாள். ஸ்மார்த்த சபை குந்நங்குளம் மனையில் அந்த நம்பூதிரிப்பெண்ணிடம் அவளது கருவுக்குக் காரணமானவர்களைப்பற்றிக் கேட்டது. அப்பெண் பத்துப்பதினைந்து பெயர்களைச் சொன்னாள். அதில் ஒன்று மேலங்கத்து கோபாலமேனன்.
ஸ்மார்த்த சபையின் சிபாரிசின்படி கோழிக்கோடு சாமூதிரி மன்னர் அந்த நம்பூதிரிப்பெண்ணை சாதிவிலக்கு செய்தார். அவளால் பெயர் சுட்டப்பட்ட நம்பூதிரிகளுக்கும் சாதிவிலக்கு அளிக்கப்பட்டது. மற்ற சாதியினருக்கு பலவகையான தண்டனைகள் கிடைத்தன. நாயரான மேலங்கத்துக் கோபால மேனன் நாடுகடத்தப்பட்டார். [மேனன் என்பது வரிவசூல் மற்றும் நிதிப்பொறுப்புகளை குடும்ப மரபாக வகிக்கும் நாயர்களுக்கு உரிய குலப்பட்டம்] அக்காலத்து வழக்கப்படி வட்டபறம்பில் மீனாட்சியம்மா கணவனை விவாகரத்து செய்தாள்.
அந்த நம்பூதிரிப்பெண் என்ன ஆனாள்? அத்தனை பேருடன் அவள் ஏன் உறவு வைத்திருந்தாள்? அதை அறிவதற்கு நாம் ஸ்மார்த்தவிசாரம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். கேரள சரித்திரத்தில் பலவகையான ஆய்வுகளுக்குரிய ஆர்வமூட்டும் சமூக வழக்கமாக இருந்தது அது. அது ஒரு சாதிச்சடங்கு.
கேரளத்தில் உள்ள மலையாளப் பிராமணர்கள் ஒரே சிறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நம்பூதிரிகள் எனப்படுகிறார்கள். இவர்கள் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆந்திராவில் இருந்து மலைப்பாதை வழியாக கேரளத்துக்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்பது பிரபலமான ஊகம். இக்காலகட்டத்தில் பெரும் இஸ்லாமியப்படையெடுப்புகளால் ஆந்திர மையநிலப்பகுதி சின்னபின்னமாகிக்கிடந்தது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்த காலகட்டம் இது.
கேரளத்து நிலத்தில் பெரும்பகுதி முழுக்க முழுக்க கொடும்காடாகக் கிடந்த காலம் அது. புராதன சேர மன்னர்குலம் சோழர்களின் படையெடுப்பு மூலம் அழிக்கப்பட்டது. கி.பி பதினொன்றாம்நூற்றாண்டுவரை முந்நூறு வருடம் கேரளத்தில் சோழர்களின் நேரடி ஆட்சி நிலவியது. சோழர்களின் ஆட்சி மறைந்தபோது சோழர்களுடைய தளபதிகளாக இருந்தவர்களும் சோழர்களுக்குக் கப்பம்கட்டிவாழ்ந்த உள்ளூர் குறுநிலப்பிரபுக்களும் சுதந்திர அரசர்களாக தங்களை பிரகடனம்செய்துகொண்டார்கள். இவர்களில் சிலர் பழைய சேரமன்னர்களின் வாரிசுகள். ஐதீகத்தின்படி ஐம்பத்தியாறு சிறு அரசுகள் இக்காலகட்டத்தில் சின்னஞ்சிறு கேரள மண்ணில் இருந்தன.
இக்காலகட்டத்தில் கேரளத்துக்கு வந்த ஆந்திர தேசத்து வைதீகர்கள் கேரள மன்னர்களால் விரும்பி வரவேற்கப்பட்டார்கள். ஏன் என்பதை நாம் வரலாற்றுக் கோட்பாட்டாளரான டி.டி.கோஸாம்பியின் பார்வையில் விளங்கிக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில் பலவகையான இனக்குழுக்களை ஒன்றாகத்திரட்டி ஓர் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக வைதிகம் விளங்கியது. இந்திய நிலப்பகுதியெங்கும் பிராமணர்களின் சாத்வீகமான அதிகாரப்பரவலாக்கம் மூலமே படையெடுப்புகள் இல்லாமல் இனக்குழுக்கள் வெல்லப்பட்டு, ஒற்றைச்சமூகமாக திரட்டப்பட்டு, அரசு உருவாக்கம் நிகழ்ந்தது என்கிறார் டி.டி.கோஸாம்பி
அந்த வழிமுறையையும் டி.டி.கோஸாம்பியே சொல்கிறார். பெருமதம் சார்ந்த கோயில்களை நிறுவுவதும் நாட்டார் வழிபாட்டுத்தெய்வங்களை பெருந்தெய்வங்களாக மாற்றுவதும் முதல்படி. அந்த நம்பிக்கையின் மையச்சரடில் பல்வேறு சாதிகளை அடுக்குவது அடுத்த படி. அவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்தியல் அதிகாரம் இவ்வாறாக நிறுவப்படுகிறது. அந்த அதிகாரத்தை தங்களை ஆதரிக்கும் மன்னர்களுக்கு வைதீகர்கள் அளிக்கிறார்கள். அவ்வாறாக க்ஷத்ரிய - வைதிக கூட்டு உருவாகிறது. இதுவே நம் மரபின் அதிகாரக்கட்டுமானத்தின் சூத்திரம்.
கேரளநிலத்தில் சிவன்,விஷ்ணு,ராமன்,கிருஷ்ணன் போன்ற பெருந்தெய்வங்களை நம்பூதிரிகள் நிறுவினார்கள். சேரன்செங்குட்டுவன் காலம் முதலே இருந்துவந்த பத்தினித்தெய்வ வழிபாட்டை பகவதி வழிபாடாக உருமாற்றம்செய்தார்கள். கேரளத்தின் அதிகாரம் கோயில்களை மையமாக்கியதாக அமைந்தது. கோயில்கள் நம்பூதிரிகளின் உடைமைகளாக இருந்தார்கள். இவ்வாறு ஒருநூற்றாண்டுக்குள் கேரளத்தின் மொத்த அதிகாரமும் நம்பூதிரிகளின் கைகளுக்கு வந்தது. நம்பூதிரிகளைப் பேணிய கோழிக்கோடு சாமூதிரி, கொச்சி மன்னர் போன்றவர்கள் அவர்களின் ஆசிபெற்று பெரிய மன்னர்களாக ஆனார்கள். பிற சிறிய மன்னர்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்
உச்ச அதிகாரத்தில் இருந்த நம்பூதிரிகள் தங்கள் சாதியின் தனித்துவத்தைப் பேணுவதில் கவனமாக இருந்தார்கள். பிற பிராமணர்கள் எவரிடமும் இல்லாத பல சடங்குகளும் நம்பிக்கைகளும் குலவழக்கங்களும் அவர்களுக்கு உண்டு. அவற்றைப்பேணும்பொருட்டு சாதிச்சபைகளையும், சாதி நீதிமன்றங்களையும், அதற்கான விசாரணை முறைகளையும் உருவாக்கி மிகக்கறாராக கடைப்பிடித்தார்கள். தங்கள் சாதித் தனித்துவத்தைப் பேண விரும்பும் எல்லா சிறிய சாதிகளையும்போல தங்கள் பெண்களுக்கு பிற சாதியிடம் தொடர்பே ஏற்படக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். ஆகவே பெண்கள் மீது உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூர்க்கமாகப் பெண்களை ஒடுக்கும் இந்த வழக்கம் பெரும்பாலும் எல்லா பழங்குடிகளிடமும் இருப்பதுதான். நம்பூதிரிகளின் பல பழக்கவழக்கங்கள் முற்றிலும் பழங்குடித்தன்மை கொண்டவை.
நம்பூதிரிப்பெண் அந்தர்ஜனம் [உள்ளே இருப்பவள்] என்று அழைக்கப்பட்டாள். அதன் மொழியாக்கம் சாதாரணர்களால் அழைக்கப்பட்டது, அகத்தம்மா. அந்தர்ஜனங்கள் வெள்ளை ஆடை மட்டுமே அணியவேண்டும். உடலையும் முகத்தையும் முழுமையாக மறைத்துக்கொண்டுதான் வெளியே கிளம்ப வேண்டும். குளிப்பதற்குக் கூட தனியாக வீட்டை விட்டு செல்லவே கூடாது. எப்போதும் கையில் ஒரு ஓலைக்குடையை வைத்திருக்க வேண்டும். இதற்கு மறைக்குடை என்று பெயர். ஆண்கள் யாரைக் கண்டாலும் அந்தக்குடையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். விதவை மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. மொத்தத்தில் இருண்ட நம்பூதிரி இல்லங்களில் பிறந்து இருளில் வாழ்ந்து இருளில் மடியும் வாழ்க்கை அவர்களுடையது.
நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்களுடன் உதிர உறவை நிறுவினார்கள். நாயர்கள் நேரடியாக ஆயுதங்க¨ளைக் கையாண்ட சாதி. நிலங்களை கையில் வைத்திருந்தவர்கள். இந்த உறவு நம்பூதிரிகளுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது.நாயர்களுக்கு மத அதிகாரத்தை அளித்தது.
இந்த வழக்கம் நின்றுவிடாமலிருக்க நம்பூதிரிகள் ஒரு மரபை சட்டமாக்கினார்கள். நம்பூதிரிச் சாதியில் ஒரு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப்பெண்ணை மணம் புரிந்துகொள்ள முடியும். பிற மகன்கள் மன்னர்குடும்பங்களிலோ, நாயர் சாதியிலோ மட்டுமே மணம்புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்பூதிரிப்பெண் விலக்கு. நம்பூதிரிகள் ஆண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நாயர்கள் பெண்வழிச்சொத்துரிமை கொண்டவர்கள். ஆனால் நம்பூதிரிச்சொத்துக்களுக்கு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே வாரிசு. பிறருக்கு எந்த உரிமையும் இல்லை
இதன் விளைவாக நம்பூதிரிச் சொத்துக்கள் நூற்றாண்டுகளாக பிளவுபடவே இல்லை. நம்பூதிரிச்சாதியின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆகவே அவர்களின் ஆதிக்கம் நீடித்தது. ஆனால் நம்பூதிரிப்பெண்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கன்னியராகவோ விதவைகளாகவோ நின்றுவிட நேர்ந்தது. ஆகவே அவர்களிடம் பாலியல் மீறல்களுக்கான வாய்ப்புகள் சற்று அதிகம். இதனால் நம்பூதிரிகள் தங்கள் பெண்களின் கற்பை கண்காணிக்கவும் தண்டிக்கவும் ஸ்மார்த்த சபை என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டார்கள். பாலுறவைக் கண்காணிப்பத¦ற்கென்றே ஒரு தனி அமைப்பு வைத்திருந்த ஒரே சாதி நம்பூதிரிகள்தான்.
ஸ்மார்த்த சபை என்பது ஆசார விதிகளின்படி ஒழுக்க மீறல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பு. இதன் தலைவர் ஸ்மார்த்தர் என்று அழைக்கப்படுவார். இவருக்கு உதவிசெய்ய பிற நம்பூதிரிகள் உண்டு. ஒழுக்க மீறலுக்குக் குற்றம்சாட்டப்பட்ட நம்பூதிரிப்பெண் உடனடியாக தனி அறையில் கடுமையான காவலுடன் அடைக்கப்படுவாள். நாவிதர் அல்லது வண்ணார் சாதியைச் சேர்ந்த முதியபெண் ஒருத்தி அவளிடம் பேசுவதற்காக அமர்த்தப்படுவாள். குற்றம் சாட்டப்பட்ட பெண் இருக்கும் அறைக்கு வெளியே மூடிய கதவுக்கு இப்பால் நின்றபடி ஸ்மார்த்தர் அவளிடம் கேள்விகள் கேட்பார். அதை அந்த முதியபெண் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கேட்டு பதில் பெற்று சொல்லவேண்டும்.
குற்றம்சாட்டப்பட்ட பெண் தொடர்ச்சியாக உணவும் நீரும் இல்லாமல் பட்டினி போடப்படுவாள்.பிற வேலைக்காரிகளை வைத்து அடிப்பதும் சூட்டுகோல் காய்ச்சி சூடுபோட்டு வதைக்கப்படுவதும் உண்டு. அறைக்குள் மிளகாய்தூள்போட்ட புகையை நிறைப்பது, பலநாட்கள் ஈரத்திலேயே போட்டிருப்பது, தொடர்ச்சியாக தூங்கவிடாமல் செய்வது போன்று வதைகளின் பட்டியல் நீள்கிறது. ஒருசமயம் அந்த அறைக்குள் பாம்பு விடப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், குற்றம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும்! அக்குற்றத்தில் தன்னுடன் ஈடுபட்டவர்களின் பெயர்களை அவள் சொல்லியாகவேண்டும். பொதுவாக சபை அவளை விபச்சாரி என முத்திரை குத்த விரும்புவதனால் அவள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களைச் சொல்லும் வரை சித்திரவதை நீளும்.
அவள் பெயர்களைச் சொன்னதும் அவளை இழுத்துவந்து தாழ்ந்த சாதியினருக்கு விற்கிறார்கள். அந்த தொகை அரசாங்க கஜானாவில் கட்டப்படும். அத்துடன் அவளுடைய சாதி அடையாளம் அழிந்துவிடும். வீட்டைவிட்டு வெளியேற்றியதும் அவளை இறந்தவளாக தீர்மானித்து உரிய இறுதிச்சடங்குகள் குடும்பத்தாரால்செய்யப்படும். இதற்கு ‘படியடைச்சு பிண்டம் வைத்தல்’ என்று பெயர். அவளை வாங்கியவன் அவளைக் கொண்டுசெல்வான்.
ஸ்மார்த்தவிசாரத்தில் பெயர்சுட்டப்பட்டவர்களைப்பற்றி மன்னருக்கு சொல்லப்படும். மன்னர் அவர்களுக்கு தண்டனை விதிப்பார். நாயர் சாதியைவிட தாழ்ந்தவர்கள் அதில் இருந்தால் உடனடியாக சிரச்சேதம் செய்யப்படுவார்கள். தலித்துக்கள் என்றால் கழுவேற்றப்படுவார்கள். நாயர்கள் பொதுவாக சாதிவிலக்குக்கும் நாடுகடத்தலுக்கும் ஆளாவார்கள். நம்பூதிரிகளுக்கு சாதிவிலக்குத் தண்டனை.
சாதிவிலக்குத்தண்டனை அளிப்பதற்கு முன்னர் நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்கும் ஒரு ‘உண்மை கண்டறியும் சோதனை’ உண்டு. இதற்கு ‘கைமுக்கு’ என்று பெயர். சுசீந்திரம் கோயில் புகழ்பெற்ற கைமுக்கு மையமாக இருந்தது. திருவிதாங்கூரில் எங்கே ஸ்மார்த்த விசாரம் நடந்தாலும் கைமுக்கு நடப்பது சுசீந்திரத்தில்தான். இங்குள்ள செண்பகராமன் மண்டபத்தில் இது நிகழும். இதைப்பற்றி முனைவர் அ.கா.பெருமாள் ‘சுசீந்திரம் ஆலயவரலாறு’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுச்சபை முன் நிறுத்தப்படுவார்கள். பெரிய உருளியில் கொதிக்கவைத்த நெய்யில் கைவிட்டு உள்ளே இருக்கும் சிறிய பொற்சிலை ஒன்றை எடுக்க வேண்டும். கையில் தீக்காயம்படாவிட்டால் நிரபாராதி என்று தீர்ப்பாகும். தீக்காயம் பட்டால் உடனடியாக சாதிவிலக்கு அறிவிக்கப்படும். சாதிவிலக்கு பெற்றவர் பின்னர் தேவதாசி சாதியில் இணைந்துகொள்வதுதான் வழக்கம். பின்னர் இச்சடங்கில் கையில் துணிசுற்றிக்கொண்டு கொதிக்கும்நெய்யில் கைவிட்டால்போதும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது. மகாராஜா சுவாதித்திருநாள் இந்த வழக்கத்தை நிறுத்தினார்.
1893 ல் திரிச்சூர் அருகே உள்ள வெங்கிடங்கு என்ற ஊரில் உள்ள வடவர்கோட்டு மனை என்ற நம்பூதிரி இல்லத்தில் பதினைந்து வயதான பருவம் வந்த நம்பூதிரிச்சிறுமி குளத்தில் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது அங்கே வேதமோதுதல் கற்பிக்க வந்திருந்த முதியவரான நம்பூதிரி [இவர்களுக்கு ஓதிக்கன் என்று பெயர்] அவள் கையைப்பிடித்து இழுத்து முத்தமிட முயன்றார். அவரைப் பிடித்துத் தள்ளியபின் ஓடிப்போன அந்தச்சிறுமி தன் அம்மாவிடம் தன்னை ஓதிக்கன் கைப்பிடித்து இழுத்துவிட்டதாகச் சொன்னாள்.
அக்குடும்பத்துப் பெண்களே அதை பெரிய ஒழுக்கமீறலாகக் கண்டு புகார்சொன்னார்கள். நம்பூதிரி நெறிகளின்படி அப்படி ஒருவரை கவர்ந்தது அப்பெண்ணின் பிழையாகும். ஆகவே ஸ்மார்த்த விசாரணை நடந்தது. அப்பெண் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு ‘குற்றங்களை’ ஒப்புக்கொண்டு பிரஷ்டம் செய்யப்பட்டாள். அவளை சாதியமைப்பில் மிகக்கீழ்நிலையில் இருந்த நாயாடிகள் என்ற பழங்குடியின் தலைவனனான கிழவன் பிடித்துச்சென்றான். நாயாடிகளை அன்று ஒரு உயர்சாதியினன் பார்த்தாலே அது தீட்டு என்று கருதப்பட்டது. எலிகளை வேட்டையாடி உண்பவர்கள் அவர்கள்.
அந்தப்பெண்ணின் அப்பா திருவிதாங்கூரில் அரசபதவியில் இருந்தார். அவளுடைய தாய்வீடுதான் வடவர்கோட்டு மனை. தன் மகளைக் காப்பாற்ற அவளுடைய தந்தை கடுமையாக முயற்சி எடுத்தார். திருவிதாங்கூரில் அதற்கு முன்னரே ஸ்மார்த்த விசாரம் தடைசெய்யப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் மன்னர் அப்பெண்ணுக்காக கொச்சி மன்னரிடமும் கோழிக்கோட்டு சாமூதிரிமன்னரிமும் வாதிட்டார். ஆனால் உச்ச அதிகாரம் கொண்ட நம்பூதிரிசபையை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் அந்தப்பெண்ணை ஒரு போர்ச்சுக்கல் வணிகன் நாயாடிகளிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அவளை மணம் புரிந்துகொண்டான். அவள் மதம் மாறி கிறித்தவப்பெண்ணாக ஆனாள். கெ.வி.வாசுதேவன் நம்பூதிரிப்பாடு என்பவர் பழைய ஆவணங்களில் இருந்து இவ்வரலாற்றை ஆராய்ந்து எழுதிய கட்டுரையில் இத்தகவல்கள் உள்ளன.
பொதுவாக ஸ்மார்த்த விசாரத்துக்கு ஆளான பெண்களின் பெயர்கூட கிடைப்பதில்லை. காரணம், அவள் குற்றம்சாட்டப்படும்போதே பெயர் நீக்கம்செய்யப்படுவாள். அதன்பின் அவளை ‘சாதனம்’ [சாமான்] என்றே குறிப்பிடுவார்கள். ஆனால் ஒருபெயர் மட்டும் வரலாற்றில் தீக்கனல் போல எரிந்துகொண்டிருக்கிறது. 1905ல் பாலக்காடு அருகே உள்ள குறியேடத்து மனையில் தாத்ரிக்குட்டி என்ற இளம்பெண் ஸ்மார்த்த விசாரணைக்கு ஆளாக்கப்பட்டாள். அவளை கேரள வரலாறு மறக்கவே முடியாது
மற்ற நம்பூதிரிப்பெண்க¨ளைப்போல அல்லாமல் குறியேடத்து தாத்ரிக்குட்டி கல்வி கற்றவள். சம்ஸ்கிருத காவியங்களில் அறிமுகம் உடையவள். இசைப்பயிற்சி உண்டு. கதகளி மீது அபாரமான பிரேமை இருந்தது. இளம்விதவையாக ஆன குறியேடத்து தாத்ரிக்குட்டி தன் இல்லத்தில் நடந்த கதகளிகளை ரகசியமாகக் கண்டுவந்தாள். அக்கலைஞர்களுடன் உறவு ஏற்பட்டது. கருவுற்றாள். ஆகவே அவள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டாள்.
பொதுவாக, ஸ்மார்த்தவிசாரணைக்கு உள்ளாகும் பெண்கள் ஒருகட்டத்தில் நிறைய பெயர்களை வரிசையாகச் சொல்வதை ஆவணங்கள் காட்டுகின்றன. ஏனென்றால் அவளிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அதிகாரம் அதுவே. அவள் எந்தப்பெயர்களையெல்லாம் சொல்கிறாளோ அவர்களெல்லாம் தண்டிக்கப்படுவார்கள். அவளுடைய வன்மம் அந்தக்கணத்தில் தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய அனைவர் மேலும் பாய்கிறது. நிரபராதிகளும் தண்டிக்கப்படுகிறார்கள்.
குறியேடத்து தாத்ரிக்குட்டி செய்ததும் அதுவே. ஒட்டுமொத்த நம்பூதிரி சபையையே அவள் தன்னுடன் விபச்சாரம்செய்தவர்களாக அடையாளப்படுத்தினாள். 63 பிரபல நம்பூதிரி இல்லங்களைச் சேர்ந்த தலைமை நம்பூதிரிகள் அவளால் தண்டனைக்கு ஆளானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதில் தொடர்பில்லை என்பது வெளிப்படை. ஆனால் வேறு வழியே இல்லை, ஆசாரத்தை எவரும் மீறமுடியாது. அவர்களில் பல நம்பூதிரிகள் கைமுக்கு சோதனைக்குப் பயந்து தற்கொலைசெய்துகொண்டார்கள். பிறரை சாமூதிரிமன்னர் சாதிபிரஷ்டம்செய்தார்.
குறியேடத்து தாத்ரிக்குட்டியின் கதை கேரள இலக்கியத்தில் உக்கிரமான பல படைப்புகளை உருவாக்கியது. ”அறுபத்துநாலாவது பெயரை தாத்ரிக்குட்டி சொல்லியிருந்தால் தீர்ப்பளிக்க ஆளிருந்திருக்காது” என்று ஒரு கவிஞர் பாடினார். தாத்ரிக்குட்டி ஒரு கதகளிக் கலைஞனை கதகளிக் கதாபாத்திர வேடத்திலேயே இரவில் தன்னிடம் வரச்சொன்னாளாம். ”அவளுடைய காமம் கலையுடன்தான், அவள் புணர்ந்தது பீமனையும் அர்ஜுனனையும்தான், மனிதர்களையல்ல” என்று அவளைப்பற்றி தான் எழுதிய ஒரு கதையில் எம்.கோவிந்தன் சொல்கிறார்.
மாடம்பு குஞ்சுக்குட்டன் என்ற எழுத்தாளர் குறியேடத்து தாத்ரிக்குட்டியைப் பற்றி 1974ல் ‘பிரஷ்டு’ என்ற பிரபலமான நாவலை எழுதினார். அந்நாவல் 1975ல் ஒரு திரைப்படமாக அதே பேரில் வெளிவந்தது. அதில் புதுமுகமாக அறிமுகமான சுஜாதா அக்காலகட்டத்தில் மிகத்துணிச்சலாக நடித்திருந்தார். பிற்பாடு அவர் கெ.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ மூலம் தமிழில் பிரபலமாக ஆனார்.
2002 ல் எம்டி.வாசுதேவன்நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கிய ‘பரிணயம்’ என்ற முக்கியமான திரைப்படம் வெளிவந்தது. இது தாத்ரிக்குட்டியின் கதையை ஒட்டி இன்னும் விரிவாகவும் தீவிரமாகவும் ஸ்மார்த்த விசாரச் சடங்கைச் சித்தரிக்கிறது. மோகினி தாத்ரிக்குட்டியாக நடித்திருந்தார். ஸ்மார்த்தனாக திலகனும் தாத்ரிக்குட்டியின் குடும்ப மூத்தாராக நெடுமுடிவேணுவும் நடித்திருந்தார்கள். இதில் கதை இன்னும் இருபதாண்டுக்காலம் பின்னுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. தாத்ரிக்குட்டிக்கும் ஒரு கதகளி நடிகனுக்கும் இடையேயான உறவை மட்டுமே இது பேசுகிறது.
தாத்ரிக்குட்டி என்ன ஆனார்? திரிச்சூரைச்சேர்ந்த ஒரு ஆங்கிலோ இந்தியக் கிறித்தவர் அவளை ஏலத்தில் விலைகொடுத்து வாங்கி மணம்புரிந்துகொண்டார். கேரளத்தில் அவளுடன் வாழமுடியாமல் தமிழகத்துக்கு வந்தார். திருச்சி அருகே பொன்மனை ரயில்தொழிற்சாலையிலும் பின்னர் சென்னையிலும் அவர் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அவரது வாரிசுகள் பலவாறாகச் சிதறிப்பரந்தாலும் சில தகவல்கள் அங்கிங்காகக் கிடைக்கின்றன. அவர்களில் ஒரு பெண் இன்றுமிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
தாத்ரிக்குட்டியின் பிரஷ்டு அதிர்ச்சியலைகளை உருவாக்கி ஸ்மார்த்த விசாரணை என்ற அமைப்பின் அடித்தளத்தை உலுக்கியது. என்றாலும் ஸ்மார்த்த விசாரம் தொடர்ந்து நடந்தது. 1918 ல் நடந்த ஒரு ஸ்மார்த்த விசாரணையைப்பற்றி கேரள பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய ஏ.எம்.என் சாக்கியார் தன் சுயசரிதையில் சொல்கிறார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணன் நம்பூதிரி தற்கொலைசெய்துகொண்டார். அவர் ஏ.எம்.என் சாக்கியாரின் தந்தை. ஒருவேளை அதிகாரபூர்வமாக அதுதான் கடைசி ஸ்மார்த்த விசாரணையாக இருக்கலாம். அந்தப்பெண்ணின் பெயரும் தாத்ரிக்குட்டிதான். வாடானப்பள்ளி ஊரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் வணிகர் அவளை விலைகொடுத்து வாங்கினார்.
ஏ.எம்.என் சாக்கியார் தான் தன் சுயசரிதையில் 1903ல் மேலங்கத்துக் கோபால மேனன் சாதிப்பிரஷ்டத்துக்கும் நாடுகடத்தலுக்கும் ஆளான ஸ்மார்த்த விசாரத்தைப்பற்றி விவரிக்கிறார். கோபாலமேனன் கொழும்புவுக்குச் சென்றார். அக்காலத்தில் தோட்டத்தொழில் உருவாகிக்கொண்டிருந்த இலங்கைக்கு ஏராளமான மலையாளி நாயர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் காலப்போக்கில் அங்குள்ள வேளாளர்களுடன் கலந்து மறைந்தார்கள். கொழும்புசென்ற கோபாலமேனன் அங்கிருந்து கண்டிக்குச் சென்றார்.
நிரபராதியான கோபால மேனன் தன் மீது வந்த பழியினால் மனம் உடைந்து இருந்ததாகவும் அதனால் நோயுற்றதாகவும் சொல்லப்படுகிறது. அங்கே அவர் சத்யவதி என்ற இன்னொருபெண்ணை மணந்துகொண்டார். அவருக்கு இரு குழந்தைகள் பிறந்தன. நோய் முற்றி மேலங்கத்து கோபாலமேனன் இறந்தார்.
மேலங்கத்து கோபாலமேனனின் மனைவி தன் இரு குழந்தைகளுடன் இந்தியா வந்தார். பிழைக்க வழியில்லாமல் பரிதவித்து தன் பிள்ளைகளை நாடகக் கம்பெனியில் சேர்த்தாள். அக்குழந்தைகள் நாடகநடிகர்களாகவும் பின்னர் திரைப்பட நடிகர்களாகவும் வளர்ந்தன. இளையவர் நட்சத்திர நடிகராக ஆகி பின்னர் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆனார். மேலங்கத்துக் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர்.
சரி,தாத்ரிக்குட்டியின் வாரிசாக கருதப்படும் பெண்? அவரும் சினிமா நடிகைதான். இருநூறுக்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் நடித்த ஷீலா. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத தகவல்.
Thursday, December 18, 2008
Monday, December 8, 2008
Serve the poor...speech by jeyamohan
வைரம்
December 6, 2008 – 12:38 am
மதிப்பிற்குரிய அவையினரே,
சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர் கோயில். அங்கே அதேபோல இன்னொரு கோயில் அருகே இருக்கும் தகவலைச் சொன்னார்கள். ஆகவே காரில் கிளம்பிச்சென்றோம்.
பத்துகிலோமீட்டர் தூரம்சென்றபின்னர் விரிந்த கரும்புவயல்நடுவே அந்தக்கோயிலின் முகடு தெரிந்தது. உள்ளே சென்றோம். முகப்பு இடிந்த கோயில் அது. பக்தர்கள் வரக்கூடிய கோயில் அல்ல. தொல்பொருள்துறை பாதுகாப்பில் இருந்தது. கோயிலுக்குள் ஒரு சிறுவன் இருந்தான். அஜய்குமார் என்று பெயர். அவன் அங்கே பூசாரி. பக்கத்து கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்து பூஜை செய்துவிட்டு திரும்பிச்செல்கிறான்.
அஜய்குமார் எங்களை மையக்கருவறைக்குக் கொண்டுசென்றான். அதற்குள் மூலவிக்ரகம் இல்லை. சுதைபூசிய வெண்சுவர்தான். அவன் உள்ளே படிகள் இறங்கிச் சென்று ஆழத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் இருபக்கங்களிலும் விளக்குகளைக் கொளுத்தியபோது லிங்கத்தின் நிழல் எழுந்ந்து சுவரில் விழுந்தது. அதுதான் அங்கே மூலவிக்ரகம். சாயா சோமேஸ்வர்.
ஒரு ஆழ்மன அதிர்வை உருவாக்கும் காட்சி அது. சாயாசோமேஸ்வரைப் பார்த்தபோது எண்ணிக்கொண்டேன், இலக்கியம் என்பது அதுதான் என்று. அது ஒரு நிழல். ஆழத்தில் உள்ள லிங்கம்தான் மெய்ஞானம். இரு சுடர்களும் கற்பனைகள். வெண்சுவர்தான் மொழி. பலகோணங்களில் நான் விரிவுசெய்துகோண்டே இருந்த ஒரு கவியுருவகம் அது. கண்முன் நின்று நடுங்கும் அந்த நிழலை பல்லாயிரம் பக்தர்கள் வழிபடலாம். அதற்கு பூஜையும் ஆராதனையும் அளிக்கப்படலாம். அவற்றைப்பெறுவது உள்ளே உள்ள லிங்கம் அல்லவா?
இன்னொன்றும் தோன்றியது, அந்த நிழல் மிகவும் தற்காலிகமானது என்று நமக்குத் தோன்றுகிறது. சுடர்போலவே அது தத்தளிக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் லிங்கம் அளவுக்கே அதுவும் உறுதியானது, நிரந்தரமானது. ஆம் நண்பர்களே, எழுதும்போது, இலக்கிய ஆக்கத்தின் உச்சநிலையில், நான் எப்போதும் உணரக்கூடிய ஒன்று உண்டு. இலக்கியம் என்பது எதுவாகத் தென்படுகிறதோ அது அல்ல. எதுவாக விவாதிக்கப்படுகிறதோ அது அல்ல. அது அதைவிட மேலான, மகத்தான, ஒன்றின் பிரதிநிதி.
சற்றுநாட்களுக்கு முன் ‘தி ஹிண்டு’ ஞாயிறு இதழில் ஒரு பிரிட்டிஷ் பிரசுரகர்த்தரின் பேட்டி இருந்தது. அவர் அவரது பிரசுர நிறுவனம் விற்கும் நூல்களில் எக்காலத்திலும் தொடர்ச்சியாக அதிக விற்பனையில் இருப்பவை லியோ தல்ஸ்தோயின் நாவல்கள் என்று சொன்னார். முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பின்னர் ஆச்சரியத்திற்கு இடமில்லை என்றும் தோன்றியது. தமிழில் இப்போதுதான் அன்னா கரீனினா முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு முன் பல வடிவங்களில் அந்நாவல் வெளிவந்திருக்கிறது. உலகம் முழுக்க தல்ஸ்தோய் நாவல்களுக்கு புதிய மொழியாக்கங்கள் வந்தபடியே இருக்கின்றன. புதிய தலைமுறை அவரை படித்துக்கொண்டேதான் இருக்கிறது
ஏன்? அவரது நடை இன்று பழையதாகிவிட்டது. மிக சாவகாசமாக கதைசொல்லும் பாணி இன்று பின்னகர்ந்துவிட்டது. அனைத்துக்கும் மேலாக அவர் பேசிய சமூக,அரசியல் சூழல் இன்று இல்லை. அவர் முன்வைத்த வாழ்க்கைச்சிக்கல்களே வரலாற்றுத்தகவல்கள்தான் இன்று. ஆனாலும் அவர் இன்றும் படிக்கப்படுகிறார். ஏன்?
ஒருநாளும் அழியாத ஒன்று தல்ஸ்தோயின் ஆக்கங்களுக்குள் உள்ளது. அதை மெய்ஞானம் என்று சொல்வது என்னுடைய வழக்கம். மானுடவிவேகம் சென்றடைந்த உச்சகட்ட தளங்களை அவரது நூல்களில் நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம். தல்ஸ்தோய் படைப்புகளை நான் இப்படி வரையறைசெய்வேன். மிகக்கறாரான லௌகீகவிவேகம் மிக அருவமான மானுட அறத்தைச் சென்று தொட்டு அள்ளி எடுப்பதன் மொழித் தருணங்கள் அவை.
நண்பர்களே,பலசமயம் அவை மிக மிக எளியவை. அறிவார்ந்த சிக்கல்களுக்கு இடமே இல்லாத தெளிந்த வாழ்க்கைப்புள்ளிகள். கு.அழகிரிசாமி என்ற தமிழ் படைப்பாளி தல்ஸ்தோயின் உலகுக்குள் செல்லும் கடவுச்சீட்டு கையில் வைத்திருந்தவர். அவரது புகழ்பெற்ற கதை ஒன்றுண்டு.
சிறுகுழந்தைகள் பள்ளிவிட்டு வரும் சித்திரத்துடன் கதை தொடங்குகிறது. முத்தம்மாள் தன் அண்ணனுடன் ஒரு கட்சி. மறுபக்கம் உள்ளூர் பண்ணையாரின் மகன். அவரவர் புத்தகத்தை பிரித்து அதில் உள்ள படம் மறுதரப்பின் புத்தகத்தில் இருக்கிறதா என்று பார்க்கும் போட்டிதான் விளையாட்டு. ”என் புக்கிலே மயில் இருக்கே” என்கிறான் பண்ணையார் பையன். ”என் புக்கிலே ஒட்டகம் இருக்கே” என்று முத்தம்மாள் சொல்கிறாள். ”என் புக்கிலே ரயில் இருக்கே” என்று பண்ணையார் மகன் சொல்ல ”என் புக்கிலே லாரி இருக்கெ” என்கிறாள் முத்தம்மாள்.
கடைசியில் பண்ணையார் மகன் ”என் புக்கிலே ஆனை இருக்கே”என்னும்போது முத்தம்மாள் அவளுக்கே உரிய முறையில் கையை நீட்டி ”அய்யே, என் புக்கிலே குர்தை இருக்கெ”என்று சொல்கிறாள். பண்ணையார் மகன் தோற்று ஓடுகிறான்.
குழந்தைகள் வீடு திரும்புகின்றன. மறுநாள் தீபாவளி. முத்தம்மாவின் பெற்றோர் பரம ஏழைகள். ஒருவாறாக பணம் திரட்டி இரு குழந்தைகளுக்கும் புத்தாடை எடுத்து வைத்திருக்கிறாள் அவர்களின் அம்மா. அவளுக்கு புத்தாடை இல்லை. அப்பாவுக்கும் புத்தாடை இல்லை. புதிதாக ஏதாவது வேண்டுமே என்பதற்காக ஒரு துண்டு மட்டும் அவருக்கு வைத்திருக்கிறாள். தின்பண்டம்செய்ய ஏதோ கொஞ்சம் சாமான்கள் தேற்றி வைத்திருக்கிறாள்.
தீபாவளிக்கு முந்தைய இரவு அவர்கள் சாப்பிட்டுவிட்டு இலையை வெளியே போடும்போது ஒரு சொறிபிடித்த பையன் அந்த எச்சில் இலையை எடுத்து வழித்து தின்கிறான். அம்மா அதைக்கண்டு மனம் உருகி அவனை உள்ளே கூப்பிடுகிறாள். அவன் ஒரு அனாதைப்பையன். அப்பா அம்மா செத்துப் போனபின்னர் தெரிந்தவர் வீட்டில் இருந்தவன் அவர்களால் துரத்தப்பட்டு கோயில்பட்டியில் இருக்கும் வேறு சொந்தக்காரர் வீட்டுக்கு பல நாட்களாக நடந்தே சென்றுகொண்டிருக்கிறான். அவன் பெயரென்ன என்று அம்மா கேட்க அவன் ”ராஜா” என்று சொல்கிறான்
அவனை தன்னுடனேயே இருக்கச்சொல்கிறாள் அம்மா. தீபாவளி காலையில் அவனையும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டிவிடுகிறாள். அவன் அதே கந்தலைக் கட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டு அவனுக்கு அப்பாவுக்கு வைத்திருந்த புது துண்டை எடுத்துக் கொடுக்கிறாள். அவர்கள் விளையாடச்செல்கிறார்கள்.
பண்ணையார் வீட்டில் தலைத்தீபாவளிக்குப் புதுமருமகன் வந்திருக்கிறார். அவன் ஒரு ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகவே அவனை எல்லாரும் ராஜா என்கிறார்கள். பண்ணையார் மகன் துள்ளிக்குதித்தபடி ஓடிவருகிறான். ”எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறாரே”என்று கூவுகிறான். முத்தம்மாள் அதை பழைய விளையாட்டாக எடுத்துக்கொண்டு, அவள் தன் பாணியில் கையை நீட்டி ”அய்யே , எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறார்” என்கிறாள்.
அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற இந்தக்கதை அதன் எழுதுமுறை,நடை அனைத்தாலும் பழையதாக ஆகிவிட்டது. ஆனால் இன்றும் ரத்தினக்கல் போல கூரிய ஒளிவிட்டபடி நம் முன் நிற்கிறது இது. இக்கதையை அமரத்துவம் வாய்ந்த இலக்கிய ஆக்கமாக ஆக்குவது எது?
ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க மதபோதகர் ஒருமுறை கடற்கரைக்குச் சென்றார். அங்கே மேரி என்ற சிறுமியுடன் கொஞ்சநேரம் விளையாடினார். குழந்தையின் பெற்றோருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி இருக்கட்டுமே என்று அவர் அதனிடம் இபப்டிச் சொன்னார் ”நீ வீட்டுக்குப் போனதுமே உன் அம்மாவிடம் நான் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ¤டன் விளையாடினேன் என்று சொல்லு என்ன?”
குழந்தை சொன்னது ”சரி…நீயும் வீட்டுக்குப்போய் உன் அம்மாவிடம் நான் மேரியிடம் விளையாடினேன் என்று சொல்லு” ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் தன் போதனை அனைத்துக்கும் சாரமாக பலசமயம் மேற்கோள் காட்டும் கதைத்துணுக்கு இது.
வாழ்க்கைக்கு முன் அனைத்தும் சமம் என்ற ஞானம் நம் மனத்தின் ஆழத்தில் அமைதியான அழுத்தமாக நிலைத்திருக்கிறது. மேல்மட்டத்தில்தான் நாம் அறியும் பேதங்களின் அலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. சமத்துவத்தின் மானுடமெய்ஞானம் நம் முன் வைக்கப்பட்டதுமே நமது ஆழம் அதை அடையாளம் கண்டு கொள்கிறது.
தல்ஸ்தோயின் குட்டிக்கதை ஒன்றில் செருப்பு தைக்கும் செம்மானைத்தேடி ஏசு வருவதாகச் செய்தி வருகிறது. செம்மான் அவருக்காக உணவும் பானமும் வைத்து காத்திருக்கிறான். ஆனால் அந்த உணவையும் பானத்தையும் அவன் பனியில் சோர்ந்த தெருக்கூட்டுபவனுடன் பகிர்ந்துகொள்கிறான்.
மாலைவரை ஏசு வரவில்லை. ஆனால் செம்மான் இரவில் பைபிளை எடுத்து அவன் பிரிக்கும்போது ஒரு வசனம் பொன்னெழுத்துக்களில் மின்னுகிறது. ‘என் சகோதரரில் கடைக்கோடியினனுக்கு நீ செய்தது எனக்கே செய்ததாகும்’.
நண்பர்களே, இவ்வாறு அழகிரிசாமியின் இந்தக்கதையின் மீது வந்து படியும் நூறு நீதிக்கதைகளை நான் இப்போது சொல்லமுடியும். மகாபாரதத்தின் ஒரு கதை. தன் செல்வத்தை முழுக்க தானம்செய்யும் தருமனின் விருந்துக்கூடத்துக்கு வந்து எச்சில் இலைகள் மீது படுத்துப்புரள்கிறது ஒரு கீரி. அதன் பாதி உடல் பொன்னாக இருக்கிறது. தருமன் அதனிடம் ‘நீ செய்வதென்ன?’ என்று கேட்கிறார்
‘மாபெரும் கொடையாளி ஒருவன் அளித்த அன்னதானத்தில் அந்த எச்சில் இலையில் படுத்து நான் புரண்டேன். என் பாதி உடல் பொன்னாக ஆகியது. அவனுக்கு நிகரான ஒருவனைத் தேடி கண்டடைந்து மீதி உடலையும் பொன்னாக்க முயல்கிறேன், காணமுடியவில்லை’ என்கிறது கீரி
தன்னைவிட பெரிய கொடைச்சக்கரவர்த்தி யார் என்று தர்மன் வியக்கிறான். அதை விசாரித்துச் செல்கிறான். ஆனால் அவன் ஒரு சக்கரவர்த்தி அல்ல. தன் எளிய, கடைசி உணவையும் மனமுவந்து விருந்தினனுக்குத் தானம் செய்த ஓர் ஏழைப்பிராமணன்தான் அவன்.
அதைத்தானே நாம் பைபிளிலும் கண்டோம்? ஏதாவது ஒரு வடிவில் இந்தக்கதை இல்லாத மதமோ இலக்கியமோ உண்டா? சீனத்துக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. எந்த மெய்ஞானத்துக்கும் ஒரு சீன ஊற்றுமூலம் இருந்தாகவேண்டுமே?
சீனச்சக்கரவர்த்தி தன் சபையில் ஒருவரின் இல்லத்துக்கு வருடத்துக்கு ஒருமுறை விருந்துக்குச் செல்வதுண்டு. மானுடத்தின் முக்கால்பங்கை ஆட்சி செய்பவரின் வருகை அல்லவா? மண்ணில் வாழும் இறைவடிவமல்லவா அவர்? அவரை உபசரிக்க அந்த நபர் தன் செல்வத்தை முழுக்கச் செலவிடுவார். அந்த ஊரே அவருக்கு முன் தங்கள் செல்வங்களைக் கொண்டுவந்து குவிக்கும். அது ஒரு மாபெரும் திருவிழாவாக இருக்கும்.
அந்தச் சீனச்சக்கரவர்த்தி அவ்வாறு ஒருவரின் இல்லத்துக்கு விருந்துக்குச் செல்கிறார். வழியில் ஒரு ஞானியைப்பார்க்கிறார். ஞானிக்கு பிற உயிர்களின் மொழி தெரியும். ‘இந்த எறும்புகள் என்ன சொல்கின்றன என்று கேட்டுச்சொல்லுங்கள்’ என சக்கரவர்த்தி ஆணையிடுகிறார்.
ஞானி எறும்புகளைக் கேட்டுவிட்டு ‘அவை சக்கரவர்த்தியின் வரவேற்புக்குச் சென்றுகொண்டிருக்கின்றன’ என்று சொல்கிறார் ‘ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் விருந்தில் சிதறும் உணவை அவை உண்ண விரும்புகின்றன’
சக்கரவர்த்திக்கு தலைகொள்ளாத உவகை. அவருக்காக எறும்புகளின் உலகமே திரண்டுவருகிறதே? ஆனால் பின்னர் அவர் கவனிக்கிறார் எறும்புகளின் வரிசை செல்லும் திசையே வேறு.
”என்ன இது?”என்று சக்கரவர்த்தி கோபம் கொள்கிறார். ஞானி கூர்ந்து கேட்டுவிட்டு ”சக்கரவர்த்தியே, எறும்புகள் சரியான இடத்துக்குத்தான் செல்கின்றன. அவர்களில் ஞானியான முதிய எறும்புதான் அவற்றை இட்டுச்செல்கிறது” என்று சொல்கிறார். வியப்படைந்த சக்கரவர்த்தி தன்னைவிடப்பெரிய சக்கரவர்த்தி யார் என்று அறிய தன் பரிவாரங்களை தவிர்த்து சாதாரண மனிதனாக வேடமிட்டு ஞானியுடன் அவ்வெறும்பு வரிசையைப் பின் தொடர்ந்து செல்கிறார்
அவை சென்று சேருமிடம் ஒரு பிச்சைக்காரனின் தெருவோரக்குடிசை. அவன் அன்றைய பிச்சை உணவைச் சமைத்துக்கொண்டிருக்கிறான். அப்போது பசித்துச் சோர்ந்த இன்னொரு முதிய பிச்சைக்காரன் தள்ளாடி வந்து அந்த குடில்முன் விழுகிறான். பிச்சைக்காரன் அந்த முதிய பிச்சைக்காரனை தூக்கி எழுப்பி அவன் கைகால்களை கழுவி தன் வைக்கோல் படுக்கையில் அமரச்செய்து தன் மொத்த உணவையும் சூடாக அவனுக்கு பரிமாறுகிறான். அருகே நின்று மெல்ல விசிறுகிறான்
எறும்புகள் கூட்டம்கூட்டமாக அதன் சிதறல்களை உண்கின்றன. ஞானி குனிந்து அவற்றில் ஞானி எறும்பிடம் கேட்டுவிட்டு சக்கரவர்த்தியிடம் விளக்குகிறார். ”சக்கரவர்த்தியாக விருந்துக்குச் செல்பவன் அல்ல, சக்கரவர்த்தியாக வரவேற்கப்படுபவனே உண்மையான சக்கரவர்த்தி”
சீனச்சக்கரவர்த்தி கண்ணீர் மல்கி அந்த பிச்சைக்காரன் கால்களில் விழுந்து பணிந்தார் என்று கதை சொல்கிறது. நண்பர்களே, அதே மெய்ஞானம் அல்லவா அழகிரிசாமியின் கதைகளிலும் உள்ளது? அதுதானே அந்தக்கதையை நித்யநூதனமாக –என்றும் புதிதாக– ஆக்கியிருக்கிறது?
ஆனால் அந்த மெய்ஞானம் எத்தனை பழையது? அந்த மெய்ஞானம் இல்லாத ஒரு பழங்குடிச்சமூகம் கூட பூமிமீது இருக்க முடியாது. மனிதன் தன்னை ஒரு விலங்கல்ல என்று உணர்ந்த மறுகணமே உணர்ந்த ஞானங்களில் ஒன்றாக அது இருக்கக் கூடும். பகிர்ந்துண்ட முதல் மனிதனே மனிதப்பண்பாட்டை உருவாக்க ஆரம்பித்தவன். அந்தக்கணத்தில் சட்டென்று மனிதன் பூமியின் அதிபனாக ஆனான். விண்ணகங்களின் ஆசியனைத்தையும் பெற்றவன் ஆனான்
அந்தத்தருணத்தைத்தான் மேலே சொன்ன எல்லா கதைகளுமே தொட முயல்கின்றன. ஆம் நண்பர்களே, அழிவிலாத ஒன்று அன்றாடம் அலைவுறும் மொழியில் தன்னை பதியவைப்பதற்குப் பெயரே இலக்கியம். அதிபுராதனமான சிலவற்றை என்றும் புதிதாக நிலைநிறுத்தும் ஓயாத செயல்பாட்டின் பெயரே இலக்கியம்.
நிழலுக்கு உள்ளே கருமையின் முடிவிலாத தொன்மையுடன், கல்லின் உறுதியுடன் லிங்கம் இருந்தாகவேண்டும். மென்மையான நிழலுக்குள் இருக்கும் வைரம் அதுதான்.
நன்றி
[23-11-2008 அன்று கேரளத்தில் திரிச்சூர் அருகே கடவல்லூர் அன்யோனிய பரிஷத் மேடையில் ஆற்றிய உரை]

Wednesday, December 3, 2008
Jeyamohan's article on hitler
பாவ மௌனம்November 29, 2008 – 12:07 am
1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துரிமை தடைசெய்யப்பட்டது. அவர்கள் பிற ஜெர்மனியருடன் மனம்புரிதல் தடைசெய்யப்பட்டது. 1938 நவம்பர் 10 ஆம்தேதி யூதர்களுக்கு எதிராக ‘பொக்ரம்’ என்னும் கூட்டக்கொலை அறிவிக்கப்பட்டது. யூதர்களின் குடிகள் கொள்ளையடிக்கப்பட்டன.
1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது ஹிட்லர் யூதர்களை மானுட எதிரிகள் என்று அறிவித்தார். அவர்கள் பொது இடங்களில் நடமாடுவது, சேர்ந்து வழிபடுவது தடைசெய்யப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கெட்டோக்களில் மட்டுமே அவர்கள் வாழவேண்டுமென ஆணையிடப்பட்டது. 1941ல் யூதர்களில் 12 வயதுக்கு மேல் வயதான எல்லா யூதர்களும் ஆயுதத் தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்புக்குச் செல்லவேண்டுமென ஆணை வந்தது. ஆறு வயதுக்குமேலான எல்லா யூதர்களும் மஞ்சள்நிற அடையாள வில்லை அணிந்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது
1941ல் போர் தனக்குச் சாதகமாக திரும்பிவிட்டது என்ற எண்ணம் ஹிட்லருக்கு உருவானதும் அவர் ‘கடைசித்தீர்வு’ ஒன்றை முன்வைத்தார். முடிந்தவரை யூதர்களை திரட்டி கொன்று ஒழிப்பதே அந்தத் தீர்வு. யூதர்கள் கூட்டம்கூட்டமாக கைதுசெய்யப்பட்டு கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கடைசி துளி உழைப்பு வெளிவரும் வரை கடும் உழைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை விஷவாயு அறைகளில் தள்ளி கொலைசெய்தார்கள் ஹிட்லரின் சிறப்புப் படையினர்.
கொல்லப்பட்டவர்களின் மயிர் கம்பிளி தயாரிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. தோல் செருப்பு தைக்க பயன்பட்டது. எலும்புகள் பற்கள் எல்லாமே தொழிற்சாலைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன. ஆஷ்விட்ஸ், மாஜ்டனிக், ட்ரெப்ளின்கா, டச்சாவூ, புஷன் வால்ட், பெர்கன் -பெல்சன், செம்னோ, பெல்ஸெக், மெடானக் போன்ற கொலைமையங்களில் இரவும் பகலும் கொலை நடந்தது. 1943-44 களில் சராசரியாக மணிநேரத்துக்கு ஆயிரம்பேர் என்ற அளவில் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட 40 லட்சம் பேரை நாஜிகள் கொன்றார்கள். கட்டாய உழைப்பில் இறந்தவர்கள் உட்பட 57 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது நிபுணர் கணக்கு. ஐரோப்பிய யூதர்களில் 90 சதவீதம் பேரும் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள்.
பின்னர் மனித மனசாட்சியை உலுக்கியது இந்தக்கொலை வரலாறு. மனிதன் இத்தனை குரூரமானவனா என்ற கேள்வி எழுந்து வந்தது. சாதாரண மக்கள் எப்படி இந்தக்கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?
நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள். அச்செய்திகள் வர வர உலகமே சுய விசாரணை செய்ய ஆரம்பித்தது. மனிதனின் மனசாட்சி பற்றிய இலட்சியவாத நம்பிக்கைகள் தகர்ந்தன. கல்வி மனிதனைப் பண்படுத்தும் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து சிதைந்தது.
ஐரோப்பிய மொழிகளில் இந்தப்பேரழிவு குறித்தும் இது உருவாக்கும் அற நெருக்கடிகள் குறித்தும் ஏராளமான இலக்கியங்கள் வெளிவந்தன. அவை ‘பேரழிவிலக்கியம்’ [Holocaust writing ]என்று சுட்டப்படுகின்றன. அவற்றை ஒட்டி திரைப்படங்கள் வெளிவந்தன. இப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று ரால்·ப் ஹொஷ¥த் எழுதி 1963 ல் வெளிவந்த ‘பிரதிநிதி’ என்ற நாடகம்.[The Deputy, a Christian tragedy, ஜெர்மன் மூலத்தில் Der Stellvertreter. Ein christliches Trauerspiel ]எஸ் [Shutz Staffel] என்ற வரலாற்றுப்புகழ்பெற்ற உளவுப்படையின் லெ·ப்டினெண்ட் ஆக பணியாற்றும் கர்ட் கர்ஸ்டைன் உண்மையில் நாஜிகளுக்கு முற்றிலும் எதிரானவர். கத்தோலிக்கனாகப் பிறந்தாலும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக பல போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர்களால் புரட்டஸ்டாண்ட் என்று குற்றம்சாட்டப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்து கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள். அங்கே இருக்கும்போதுதான் கர்ட் கர்ஸ்டைன் என்னவோ நடக்கிறது என்று உணர்ந்துகொள்கிறார். ஆகவே அவன் எஸ்.எஸ்ஸில் சேர்கிறார். அதற்குள்ளேயே ஒரு மனசாட்சி ஒற்றனாக பணியாற்றுகிறார்.
கர்ட் கர்ஸ்டைன் தன் நண்பர்களிடம் ஏகாதிபத்தியத்தை உள்ளிருந்து தகர்க்கவே எஸ்.எஸ்ஸில் சேர்வதாக சொல்லியிருந்தார். நாஜிகளின் கொலைகளுக்கு கண்ணால் கண்ட சாட்சியாக விளங்கவும் தேவையான ஆதாரங்களையெல்லாம் சேர்த்து வெளியே அனுப்பவும்கர்ட் கர்ஸ்டைன் தொடர்ச்சியாக முயன்றுவந்தார். அந்த அபாயகரமான செயல்பாட்டின் தீவிரம் அவருக்கு நன்றாகவே தெரியும்.
கர்ட் கர்ஸ்டைன் ஓர் உண்மையான கதாபாத்திரம்.. 1905ல் பிறந்தார். நாஜிப்படைகளுக்குள் இருந்தபடியே சுவிட்சர்லாந்துக்கு இனப்படுகொலை குறித்த செய்திகளை அனுப்பினார். இனப்படுகொலையை உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்த கர்ஸ்டைன் அறிக்கை புகழ்பெற்றது. போருக்குப் பின் 1945ல் கைதுசெய்யப்பட்டு பிரான்ஸ¤க்குக் கொண்டுவரப்பட்டு அங்கே தற்கொலைசெய்துகொண்டார்.
கர்ட் கர்ஸ்டைன் குறித்த தகவல்களால் ஈர்க்கப்பட்ட ரால்·ப் ஹொஷ¥த் அவரை தன் நாடகத்தின் மையக்கதாபாத்திரங்களில் ஒன்றாக வைத்தார். எனினும் நாடகத்தின் மையக்கதாபாத்திரம் ரிக்கார்டோ ·பொண்டானா என்ற இளம் ஏசு சபை பாதிரியார்தான். மனசாட்சியின் குரலின்படி யூதர்களுக்காக போராடி உயிர்துறந்த ஏராளமான ஏசு சபை பாதிரிகளின் வடிவம் அந்தக் கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.
நாடகம் தொடங்கும்போது புனித பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் அவர்களின் பெர்லின் பிரதிநிதி [நூன்ஸியா] கர்ஸ்டைனின் வீட்டுக்கு வருகிறார். அவருடன் ரிக்கார்டோ ·பொண்டானாவும் வருகிறான். கர்ஸ்டைன் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்குச் சொல்கிறார். நாஜிகளில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கக் கிறித்தவர்கள். உலகில் உள்ள கத்தோலிக்கர்களில் பெரும்பகுதியினர் கம்யூனிஸ அபாயத்துக்கு எதிரான கிறித்தவ சக்தியாகவே ஹிட்லரைப் பார்க்கிறார்கள். ஹிட்லர் அவர்களை அப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்
இந்நிலையில் ஹிட்லரின் படுகொலைகளைத் தடுத்து யூதர்களைக் காக்க யாருக்காவது முடியும் என்றால் அது பாப்பரசரால்தான். அவர் ஹிட்லரையும் நாஜிகளையும் கண்டிக்க வேண்டும். அவர்கள் செய்வது கிறித்தவ மதிப்பீடுகளுக்கு எதிரானது என்று அறிவித்து அவர்களை வெளியேற்ற வேண்டும். உலகமெங்கும் அது நாஜிகளின் ஆதரவை அழிக்கும். உள்ளூரிலேயே அவர்களின் மக்கள் ஆதரவை இல்லாமலாக்கும். கண்டிப்பாக அது நாஜிகளை மறு சிந்தனை செய்ய வைக்கும். அதற்காக கர்ட் கர்ஸ்டைன் மிக உணர்ச்சிகரமாக கண்ணீர் மல்க நான்ஸியோவ்விடம் மன்றாடுகிறார். அவர் பாப்பரசரைச் சந்தித்து உண்மைநிலையை எடுத்துச் சொல்ல வேண்டுமென கோருகிறார்.
ஆனால் நூன்ஸியோ அதை மறுத்துவிடுகிறார். தன்னைப்போன்ற ஒருவர் பாப்பரசரைச் சந்தித்து அதைப்பற்றி பேசுவது சாத்தியமே அல்ல என்கிறார். மேலும் அது கிறித்தவம் சம்பந்தமான பிரச்சினையும் அல்ல. கர்ட் கர்ஸ்டைன் மனமுடைகிறார். ஆனால் அவருடன் வந்த ரிக்கார்டோ ·பொண்டானாவின் உள்ளத்தில் அது புயலைக்கிளப்புகிறது. அவனது மனசாட்சியை அது அசைக்கிறது.
தொடர்ந்து நாஜிகளின் மன இயல்புகளைக் காட்டும் காட்சிகள் விரிகின்றன. நேசநாடுகள் ஜெர்மனியில் குண்டுகளை வீசிக்கொண்டிருக்கும் காலகட்டம் அது. பெர்லின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நாஜி தலைவர்கள் கூடி களியாட்டமிடுகிறார்கள். மரணம் தலைக்கு மேல் இருக்கும்போது உருவாகும் ஒருவகை எதிர்மறைக் கிளர்ச்சியினால் அவர்கள் ததும்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது யூதப்படுகொலைகளைப் பற்றிய பேச்சு எழுகிறது. அதை ஒரு மாபெரும் வேடிக்கையாகவே நாஜி தலைவர்கள் பார்க்கிறார்கள். அது சார்ந்த நகைச்சுவைகள், ஒவ்வொருவரும்செய்த படுகொலை எண்ணிக்கைகள் பேசப்படுகின்றன. இங்கே மையக்கவற்சியாக இருப்பவர் டாக்டர் என்று நாடகத்தில் சொல்லப்படும் நாஜி அறிவியலாளர். இவர் நாஜிகளின் படுகொலைகளை நிகழ்த்திய உண்மையான கதாபாத்திரமான ஜோச·ப் மென்கீல் மற்றும் ஆகஸ்ட் ஹிர்ட் என்ற இரு அறிவியலாளர்களின் கலவையாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரமென்று சொல்லப்படுகிறது.
கையில் இரு யூத இரட்டைக்குழந்தைகளின் மூளையுடன் கர்ட் கர்ஸ்டைன்-ஐ தேடி வருகிறார் டாக்டர். தன் ஆய்வுத்தோழிக்கு அளிப்பதற்காக அதைக் கொண்டுவந்தவர் அவர் இல்லாததனால் கர்ட் கர்ஸ்டைனிடம் அதைக் கொடுத்து பாதுகாப்பாக வைக்கும்படிச் சொல்கிறார். அவர் வரும்போது ஆஷ்விட்ஸில் என்ன நடக்கிறது என்பதை தன் வேலைக்காரரான யூதரிடம் கேட்டுத்தெரிந்துகொண்டிருக்கிறார் கர்ட் கர்ஸ்டைன். டாக்டரைக் கண்டதும் வேலைக்காரர் ஜேகப்ஸனை ஒளித்து வைக்கிறார். ஆனால் ஜேகப்ஸன் ஒரூ யூதர் என்பதை டாக்டர் உணர்ந்து கொள்கிறார். டாக்டர் மிக வேடிக்கையாக தன் படுகொலை வாழ்க்கையை விவரிக்கிறார். ‘நேற்று நான் சிக்மண்ட் ·ப்ராய்டின் சகோதரியை புகையில் போட்டேன்’
ரிக்கார்டோ ·பொண்டானா இரவெல்லாம் மனசாட்சியின் துன்பத்தால் தவித்துவிட்டு மீண்டும் கர்ட் கர்ஸ்டைன் வீட்டுக்கு வருகிறான். நடப்பவற்றை விரிவாக கேட்டு புரிந்துகொள்கிறான். பாப்பரசர் கண்டிப்பாக இதில் தலையிடவேண்டுமென தானும் நினைப்பதாகச் சொல்கிறான். இங்கே நடப்பவை பாப்பரசர் வரைக்கும் போய்ச்சேர்ந்திருக்காது என்று சொல்லும் ரிக்கார்டோ ·பொண்டானா அவற்றை பாப்பரசருக்கு விரிவாக எடுத்துச் சொன்னால் அவர் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார் என்று தான் நம்புவதாகவும் அந்தப் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாகவும் சொல்கிறான். தன் அடையாள அட்டை உடைகள் கடிதங்கள் போன்றவற்றை யூத வேலைக்காரனுக்குக் கொடுத்து அவன் தப்பி ஓட உதவுகிறான் ரிக்கார்டோ ·பொண்டானா.
ரிக்கார்டோ ·பொண்டானாவின் அப்பா ·பொண்டானா பிரபு பாப்பரசரின் முதன்மை பொருளியல் ஆலோசகர் என்ற் அளவில் வாத்திகனில் மிகவும் செல்வாக்கானவர். அவரிடம் ரிக்கார்டோ ·பொண்டானா ஆஷ்விட்ஸில் நடப்பவை என்ன என்று சொல்லி தன் நோக்கத்தைச் சொல்கிறான் ரிக்கார்டோ ·பொண்டானா. மனசாட்சியுள்ள ஒவ்வொரு கிறித்தவனும் இவ்விஷயத்தில் தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் அதை பாப்பரசர் தலைமை ஏற்றுச் செய்யவேண்டுமென்றும் சொல்கிறார். தன் மகனின் கொந்தளிப்பையும் கண்ணீரையும் கண்டு தந்தை குழப்பம் கொள்கிறார். இந்தமாதிரி உணர்ச்சிகளுக்கு வாத்திகனின் உயர்மட்ட அரசியலில் இடமில்லை என்று அவர் சொல்கிறார். பாப்பரசர் அப்படி உணர்ச்சிகரமாக முடிவுகள் எடுக்க முடியாது. அவர் ராஜதந்திர நடவடிக்கைகளை பல கோணங்களில் சிந்தனைசெய்தே செய்யமுடியும். அவருக்கு இங்கே நடப்பவை தெரியும், அவர் யோசித்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்.
அந்த யதார்த்தம் ரிக்கார்டோ ·பொண்டானாவை மின்னதிர்ச்சி போல தாக்குகிறது. அவன் கத்துகிறான் ” யூதர்களை நாஜிகள் என்னசெய்கிறார் என்று நன்கறிந்தும்கூட ராஜதந்திரமௌனம் காட்டுகிற, ஒரு நாளென்றாலுகூட யோசித்துத் தயங்குகிற, தன் ஆவேசக்குரலால் இந்த கொலைகாரர்களின் குருதி குளிரும்படியாக சாபம்போடுவதற்குக்கூட சற்றேனும் தயாரில்லாத, கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசரும் கொலைக்குற்றவாளிதான்” என்று கூவியபடி மயக்கம்போட்டு கீழே விழுகிறார் ரிக்கார்டோ ·பொண்டானா.
ரிக்கார்டோ ·பொண்டானா பெர்லினின் கார்டினலிடம் இந்த விஷயம்பற்றிச் சொல்கிறார். ஆனால் கார்டினர் பாப்பரசரின் மௌனத்தை நியாயப்படுத்துகிறார். அதே பழைய வாதம்தான். நாத்திகர்களான கம்யூனிஸ்டுகள் ஸ்டாலின் தலைமையில் உலகத்தை வென்றால் கிறித்தவ சமூகமே அழிந்துவிடும். இன்றைய நிலையில் உலகின் எதிர்காலத்தை காப்பாற்றும்பொருட்டு கம்யூனிஸ்டுகளின் எதிர் சக்தியான ஹிட்லரை பாப்பரசர் ஆதரித்தே ஆகவேண்டும். மேலும் பாப்பரசர் ஏதேனும் சொன்னால் நிலைமை மேலும் மோசமாகக் கூடும் என்கிறர்.
இப்போதே பல லட்சம்பேர் கொல்லப்பட்டு விட்டார்கள் இனிமேலும் என்ன மோசமான நிலைமை வரக்கூடும் என்று ரிக்கார்டோ ·பொண்டானா கொந்தளிக்கிறான். கிறித்தவத்தை ஒரு அரசியலாக அல்ல ஒரு மனித ஆன்மீகமாக அல்லவா முன்னிறுத்துகிறோம், இந்த மனித அழிவைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் அப்புறம் என்ன மனிதநேயம் என்று கேட்கிறான். கார்டினல் மெல்ல அதைப்புரிந்துகொள்கிறார்.
அடுத்து 1943 அக்டோபர் 16 ஆம் தேதி நடந்த உண்மைச்சம்பவம், வத்திகானில் புகுந்து நாஜிகள் யூதர்களை பிடித்துக்கொண்டு செல்லும் காட்சி, உணர்ச்சிகரமாகச் சித்தரிக்கப்படுகிறது. அரண்மனையின் சாளரங்களின் கீழேயே வந்து நாஜிகள் அங்கே காவலுக்கு இருந்த யூதக்குடும்பம் ஒன்றை இழுத்துச் செல்கிறார்கள். அந்த யூதக்குடும்பம் கிறித்தவர்களாக மதம் மாறிவிட்ட ஒன்று. அதை குடும்ப மூத்தவரான பெரியவர் மீண்டும் மீண்டும் சொல்லி மன்றாடுகிறார். ஆனால் நம்பிக்கை அல்ல ரத்தமே அடையாளம் என்கிறார்கள் நாஜிகள்.
ரோமில் உள்ள ஒரு மடாலயத்தில் அங்கே பணியாற்றும் யூதர்களை ஒளித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கே கார்டினல் வந்து அவற்றைப்பார்வையிடும்போதுகர்ட் கர்ஸ்டைன் ரிக்கார்டோ ·பொண்டானா இருவரும் அங்கே வருகிறார்கள். ரிக்கார்டோ ·பொண்டானா பாப்பரசரின் மௌனத்தை கடுமையாக விமரிசனம்செய்ய கார்டினல் அவரால் எதுவும் செய்யமுடியாதென்றே வாதிடுகிறார்.
அப்போது ரிக்கார்டோ ·பொண்டானா தன் திட்டத்தை முன்வைக்கிறான். பாப்பரசர் ஒன்றும் செய்யவில்லை என்றால் தானும் இந்த யூதர்களுடன் சேர்ந்து உயிரை விடப்போவதாக அவன் சொல்கிறான். அதைக்கேட்டு கர்ட் கர்ஸ்டைன் அது முட்டாள்தனம் என்று சொல்லி தடுக்கிறான். ஆம் முட்டாள்தனம்தான், ஆனால் நான் ஒன்றும்செய்யவில்லை, வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தேன் என்ற மனசாட்சி உறுத்தலில் இருந்து தப்பிப்பதற்கு அவர்களுடன் சேர்ந்து உயிர்விடுவதே சரியான வழி என்று ரிக்கார்டோ ·பொண்டானா சொல்கிறான்.
இன்னொரு வழிகர்ட் கர்ஸ்டைன்வின் எண்ணத்தில் உதிக்கிறது. பாப்பரசர் இறந்துவிட்டார் என்றும் அவரை நாஜிகள் கொன்றுவிட்டார்கள் என்றும் வத்திகானின் அதிகாரபூர வானொலியில் அறிவிப்பது. நாஜிகளில் பெரும்பாலானவர்களான கத்தோலிக்கர்கள் ஹிட்லருக்கு எதிராகக் கிளம்புவார்கள் என்று அவன் சொல்கிறான். ஆனால் வானொலி நிலையத்துக்குப் பொறுப்பானவரான அந்த மடாலயத்தின் தலைவர் ஒருநாளும் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார். நாஜிகள் யூதர்களைக் கொல்வது தன் மனசாட்சியையும் வதைக்கிறது , ஆனால் ஒருபோதும் முறைமை மீற முடியாது என்கிறார் அவர். அவரது ஒத்துழைப்பில்லாது அந்தத் திட்டம் நிறைவேறாது என்று அது கைவிடப்படுகிறது.
நாஜிகள் யூதர்களை வதைத்துக்கொல்லும் குரூரமான சித்தரிப்புகள் வருகின்றன. அடுத்தக் காட்சி முக்கியமானது . ரிக்கார்டோ ·பொண்டானா தன் தந்தை மற்றும் கார்டினலின் உதவியுடன் பாப்பரசர் 12 ஆம் பயஸ் அவர்களைச் சந்திக்கிறான். ஜெர்மனியில் நடப்பவற்றைச் சொல்லி பாப்பரசரின் மனசாட்சியை கரையச்செய்ய அவன் செய்த முயற்சிகள் எல்லாமே வீணாகின்றன. மீண்டும் மீண்டும் கம்யூனிச அபாயத்தைப்பற்றி மட்டுமே பாப்பரசர் சொல்லிக்கொண்டிருக்கிறார். பொறுமை இழந்த ரிக்கார்டோ ·பொண்டானாவின் அப்பா தானும் தன் மகனின் தரப்பை வலியுறுத்துகிறார். அதையும் பாப்பரசர் பொருட்படுத்துவதில்லை.
இத்தாலியில் திருச்சபையின் சொத்துக்கள் நேசாநாடுகளின் குண்டுவீச்சால் அழிவதைப்பற்றிச் சொல்லிக் கவலைப்படுகிறார் பாப்பரசர். அவற்றை இப்போது ஜெர்மனியே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. யூதர்கள் காப்பாற்ற வேண்டுமென தானும் நினைப்பதை மீண்டும் மீண்டும் பாப்பரசர் சொல்கிறார். ஆனால் நிலைமை மோசமாக ஆகாமல் தடுக்க மௌனமாக இருப்பதே நல்லது என்று வலியுறுத்துகிறார்.
அப்படியானால் கொலைகளை நிறுத்துமாறு ஒரு விண்ணப்பமாவது வெளியிடலாமே என்று ரிக்கார்டோ ·பொண்டானாவின் அப்பா சொல்கிறார். அது நாஜிகளைக் குற்றம்சாட்டுவதாக ஆகும் என்கிறார் பாப்பரசர். கடைசியில் எவரும் எவரையும் தாக்காமல் அன்புற்று வாழவேண்டுமென பாப்பரசர் ஆசைப்படுவதாக ஒரு பொதுவான அறிக்கையில் கைச்சாத்து போடுவதற்கு மட்டுமே பாப்பரசர் சம்மதிக்கிறார். அந்த அறிக்கையினால் எந்த பயனும் இல்லை என்று ரிக்கார்டோ ·பொண்டானாவின் தந்தை பாப்பரசரிடம் சொல்லும்போது அதற்குமேல் தன்னால் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று அவர் சொல்லிவிடுகிறார். அது ரிக்கார்டோ ·பொண்டானாவை மனம் உடையச்செய்கிறது.
ஆனால் பாப்பரசர் தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்வதில்லை. கைச்சாத்து போட்டபின் பாப்பார்சர் கைகழுவும்போது ரிக்கார்டோ ·பொண்டானா சொல்கிறார் ”ஒரு பாப்பரசர் இறைவனின் அழைப்பைக் கேட்க மறுக்கிறார் என்பதற்காக கடவுள் தன் திருச்சபையைக் கைவிட்டுவிட மாட்டார்” ஆவேசமாக அதைச் சொன்னபடி ரிக்கார்டோ ·பொண்டானா வெளியேறுகிறான். இந்தக் காட்சி மேரி கொரெல்லி எழுதிய ‘கிறித்தவத்தலைவர்’ [மாஸ்டர் கிறிஸ்டியன்] என்ற புகழ்பெற்ற நாவலின் சாயலில் அமைந்துள்ளது என்று படுகிறது.
ரிக்கார்டோ ·பொண்டானா யூதர்கள் அணியவேண்டிய சுய அடையாளச்சின்னமாகிய மஞ்சள் நட்சத்திரத்தை தன் உடைமீது மாட்டிக்கொள்கிறான். பாப்பரசர் யூதப்படுகொலையைக் கண்டிக்கும்வரை நான் அதை அணிவேன் என்றும் அதன்பொருட்டு சாவேன் என்றும் ரிக்கார்டோ ·பொண்டானா சொல்கிறான்.
யூதப்படுகொலைகளின் சித்தரிப்புகள் வழியாக நீள்கிறது நாடகம். இருளில் நகரும் ரயில் வண்டிகளில் கொண்டுசெல்லப்படும் யூதர்களில் ஒரு கிழவரும் ஒரு இளம்பெண்ணும் ஒரு முதிய பெண்ணும் சொல்லும் தன்கதைகள் மேடையில் ஒலிக்கின்றன. ரயில் செல்லும் ஒலி பின்னணியாக ஒலிக்கிறது. ஆஷ்விட்சில் அவர்களை ஆடுமாடுகளைப்போல இழுத்துச்செல்கிறார்கள்.
ரிக்கார்டோ ·பொண்டானா யூதர்களுடன் சேர்ந்து ஆஷ்விட்ஸ¤க்கு வருகிறான். அங்கே அவன் கொலைநிபுணரான டாக்டருடன் ஒரு பெரிய உரையாடலில் ஈடுபடுகிரான்.டாக்டருடன் ரிக்கார்டோ ·பொண்டானா நிகழ்த்தும் உரையாடல் இந்நாடகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். டாக்டர் ஒரு தஸ்தயேவ்ஸ்கி கதாபாத்திரம்போலிருக்கிறார். நீண்ட தன்னுரையாடல்களை செய்கிறார். குறிப்பாக ‘நிந்திக்கப்பட்டவர்களும் சிறுமைப்பட்டுத்தப்பட்டவர்களும்’ நாவலில் நெல்லியின் தந்தையாக வரும் பிரபுவை நினைவுபடுத்துகிறார். தீமையின் மொத்தவடிவமாக வரும் டாக்டர் அந்த தீமையை நியாயப்படுத்தி அதில் தான் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார்
ஒருநாளைக்கு பத்தாயிரம்பேரைக் கொலைக்களத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். எளிய மக்களை. குழந்தைகளை தாய்மார்களை வயோதிகர்களை. மனிதர்களால் சிறப்பாகச் செய்யப்படக்கூடிய ஒரு விஷயமென்றால் சாவதுதான் என்று சொல்லும் டாக்டர் ‘கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தன் இருப்பை அடையாளம் காட்டியாக வேண்டிய தருணம் இது’ என்று சொல்லி சிரிக்கிறார். அந்த மானுடமறுப்பும் இறைமறுப்பும் ரிக்கார்டோ ·பொண்டானாவை மனம் உடையச்செய்கின்றன. கடவுள் மனிதர்களை நிராதரவாக விட்டுவிட்டார் என அவன் உணரும் இடம் அது.
டாக்டர் ரிக்கார்டோ ·பொண்டானாவை கட்டாய உழைப்புமுகாமுக்கு அனுப்புகிறார்.கர்ட் கர்ஸ்டைன் ரிக்கார்டோ ·பொண்டானாவை தப்புவிக்க முயன்று அங்கே வருகிறார். ரிக்கார்டோ ·பொண்டானா ஒரு ஜெர்மனிய பாதிரி என்றும் அவனை விடுதலைசெய்ய வேண்டுமென்றும் ஓர் ஆணையை தயாரித்துக் கொண்டுவந்து சிறைப்பொறுப்பாளர்களை ஏமாற்றுகிறார். அவர் எஸ்.எஸ் படையின் லெ·ப்டினெண்ட் ஆனதனால் அந்த கடிதத்தை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ரிக்கார்டோ ·பொண்டானா தப்புவதற்கு மறுத்துவிடுகிறான். அங்கே யூதர்களுடன் இறப்பதே தன் ஆத்மாவுக்கு ஆறுதல் அளிக்கும் என்று சொல்லிவிடுகிறான்.
அப்போது அங்கே ரிக்கார்டோ ·பொண்டானாவின் பழைய சமையற்காரரான ஜேகப்ஸனைக் காண்கிறார்கள். ரிக்கார்டோ ·பொண்டானாவின் உடைகள் மற்றும் அடையாளக்காகிதங்களுடன் தப்ப முயன்ற அவன் பிடிபட்டு அங்கே மரணத்தைக் காத்திருக்கிறான்.அவன் தன்னை பிடிவாதமாக ரிக்கார்டோ ·பொண்டானா என்றே சொல்லிவந்தமையால் பாதிரி ரிக்கார்டோ ·பொண்டானா என்றே அழைக்கப்படுகிறான். வேறுவழியில்லாத கர்ட் கர்ஸ்டைன் தன் கையில் இருந்த ஆணையை பயன்படுத்தி அந்த சமையற்காரனை தப்பவைக்கலாமென முடிவுசெய்து அவனை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான்
ஆனால் அவர்கள் வெளியேறும் இடத்தில் அவர்களை டாக்டர் தடுக்கிறார். அவரால் யூதர்களை உடனே அடையாளம் காணமுடியும். உண்மையை புரிந்துகொண்டதும் டாக்டர் சிரித்துக்கொண்டே அவர்களை கைதுசெய்ய முயல்கிறார்.கர்ட் கர்ஸ்டைன் தன் துப்பாக்கியை உருவுகிறார். அதை காவலர் தடுத்துவிடுகிறார். அந்நேரம் அங்கே வரும் ரிக்கார்டோ ·பொண்டானா நடந்ததை ஊகித்து கர்ட் கர்ஸ்டைன் மீது தவறில்லை என்றும் தனக்குப்பதிலாக சமையற்காரனை அதிகாரிகள்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் வாதிடுகிறான்.
அந்நேரம் அங்கே தரை துடைத்துக்கொண்டிருந்த ஒரு கார்லோட்டா என்ற யூதப்பெண் அவர்கள் பேச்சிலிருந்து அவளுடைய உறவினர்கள் எல்லாரும் கட்டாய உழைப்புமுகாமில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு மனப்பிறழ்வடைந்து டாக்டரை நோக்கி ஏதேதோ கூவி தாக்க முயல்கிறாள். அவளை மென்மையாகப்பேசி ஓரமாகக் கூட்டிச்சென்ற டாக்டர் சாதாரணமாகச் சுட்டுக்கொன்ற பின் சிரித்தபடி திரும்பிவருகிறார்
அந்தக் குரூரத்தைக் கண்டு பாதிரியாரான ரிக்கார்டோ ·பொண்டானா தன்னை மறந்து கீழே கிடந்த கர்ட் கர்ஸ்டைன்னின் துப்பாக்கியை எடுத்து டாக்டரைச் சுடமுயல அவனை படைவீரன் ஒருவன் சுட்டு வீழ்த்துகிறான்.கர்ட் கர்ஸ்டைன் கைதுசெய்து இழுத்துச்செல்லபடுகிறான். டாக்டர் நிதானமாக ரிக்கார்டோ ·பொண்டானா மற்றும் கார்லோட்டாவின் சடலங்களை அகற்ற ஆணையிடுகிறார். ரிக்கார்டோ ·பொண்டானாவின் சட்டைப்பியில் இருந்து இக்னேஷியஸ் லயோலாவின் ‘ஆன்மீகப்பயிற்சிகள்’ என்ற சிறு நூலை எடுத்து புன்னகையுடன் புரட்டி வாசித்தபடி அரங்கிலிருந்து டாக்டர் வெளியேறுகிறார்.
ஓர் அறிவிப்புடன் நாடகத்தின் திரை சரிய ஆரம்பிக்கிறது. கடுமையான கட்டாயங்கள் இருந்தும் யூதப்படுகொலையை கண்டிக்க பாப்பரசர் மறுத்தற்கு நாஜிகள் தரப்பில் நன்றி தெரிவித்து 1943 அக்டோபர் 28 ஆம் தேதி வாட்டிகனின் ஜெர்மானிய தூதர் பாப்பரசருக்கு அனுப்பினார். அந்தக் கடிதவரிகள் ஒலிக்கின்றன. 1944ல் ருஷ்யப்படைகள் ஹிட்லரை முழுமையாகத் தோற்கடிக்கும்வரை படுகொலை மையங்கள் தீவிரமாகவே செயல்பட்டன என்று நாடகம் முடிகிறது.
நாடகத்துக்குப் பின்னிணைப்பாக ரால்·ப் ஹொஷ¥த் நீண்ட ஒரு பின்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் நாடகத்தில் முன்வைக்கப்பட்ட எல்லா தகவல்களும் உண்மைகள் என்று குறிப்பிட்டு அதற்கான விரிவான ஆவண ஆதாரங்களையும் அளித்திருக்கிறார்.
***ரால்ப் ஹொஷ¥த் [Rolf Hochhuth ] 1931ல் ஜெர்மனியில் Eschwege என்ற ஊரில் பிறந்தார். அவரது புகழ்பெற்ற ஆக்கம் என்றால் இந்நடகம்தான். இதை ஒரு நல்ல கலைப்படைப்பு என்று சொல்லிவிடமுடியாது. நீள நீளமான உரையாடல்களும், செயற்கையான கதை நகர்வுகளும் கொண்ட நாடகம் இது. அதிலும் அதன் இறுதிக்காட்சி மிகத் தட்டையானது. இரு காட்சிகளையே சிறப்பானதெனச் சொல்ல முடியும். ரிக்கார்டோ பாப்பரசரைச் சந்திக்கும் காட்சியும் டாக்டருடனான அவனுடைய உரையாடலும்.
ஆனால் இந்நாடகத்தின் நோக்கம் நேரடியான பிரச்சாரம்தான். ஹொஷ¥த் அதன்பின்னர் இரு சர்ச்சைக்குரிய நாடகங்களை எழுதியிருக்கிறார். இந்நாடகம் ஆங்கிலத்தில் முதலில் வெளியானபோது ஆப்ரிக்காவில் கிறித்தவ சேவை மூலம் வாழும் புனிதராக அறியப்பட்ட ஆல்ப்ரட் சுவைட்சர் இதற்கு முன்னுரை எழுதியிருந்தார்.
இந்நாடகம் 1963ல் இர்வின் பிகாடரின் இயக்கத்தில் முதன்முறையாக பெர்லினில் நடிக்கப்பட்டது. நாடகமேடைகளில் பெரும் அலையைக்கிளப்பிய இது விரைவிலேயே ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் பல வருடங்கள் பல மேடைகளில் நடத்தப்பட்ட இந்நாடகம் கத்தோலிக்கர்களால் கடுமையாக விமரிசனமும் செய்யப்பட்டது. கடவுளின் வடிவமாக எண்ணப்பட்ட பாப்பரசரை குற்றவாளியாக நிறுத்தும் இந்நாடகம் அவர்களைக் கொந்தளிக்கச் செய்தது. ஆனால் அன்றைய கத்தோலிக்க அறிஞர்களில் கணிசமானவர்கள் இந்நாடகத்தை ஆதரித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் இத்தாலியின் கத்தோலிக்க யூதர்கள் வத்திகனின் வாசல்களில் இருந்து நாஜிகளால் இழுத்துச்செல்லப்பட்டபோது மௌனமாக இருந்தார். அவர்களுக்காக அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களின் ஆத்மா சாந்திஅடைய பிரார்த்தனை செய்யவும் இல்லை. ஏன், கிறித்தவ குருமார்களாகவும் கன்னியராகவும் இருந்து நாஜிகளால் வதைமுகாமில் கொல்லப்பட்ட யூதர்களுக்காகச் செய்யவேண்டிய மதச்சடங்குகளைச் செய்வதற்குக் கூட அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்நாடகம் பாப்பரசர் பத்தாம் பயஸின் நற்பெயரை அழித்ததுடன் கத்தோலிக்கத் திருச்சபையையே கூண்டிலேற்றி குற்றம் சாட்டியது. ஆகவே திருச்சபை எதிர்ப்பிரச்சாரங்களில் இறங்கியது. பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் அவரது மௌனத்தின் மூலம் யூதர்களை காத்தார் என்று திருச்சபை வாதிட்டது. அவரது விரிவான வணிக முதலீடுகளைக் காக்கவே அவர் மௌனம் சாதித்தார் என்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு அந்த வாதம் மறுக்கப்பட்டபோது ஹோஷ¥த் ஒரு கெ.ஜி.பி உளவாளி என்று முத்திரை குத்தப்பட்டார். நாடகம் வெளிவந்த அதே வருடம் டாக்டர் ஜோச·ப் லிச்டன் [Dr. Joseph Lichten] எழுதிய A Question of Judgment என்ற நூல் வெளிவந்து பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் அவர்களை நியாயப்படுத்தியது.
இந்த எதிர்பிரச்சாரத்தின் ஒரு உச்சமாக பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ¤க்கு நூற்றுக்கணக்கான யூத உயிர்களைக் காப்பாற்றியமைக்காக புனிதர் பட்டம் வழங்கப்படவேண்டுமென வாத்திகன் முடிவெடுத்தது. அதற்கான கருத்தியல்பிரச்சாரம் இருபதுவருடங்களுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு பலநூறு பக்கங்கள் எழுதி வெளியிடப்பட்ட பின்னர் இவ்வருடம், 2008 அக்டோபர் 30 அன்று அவர் ஆசீர்வதிக்கபப்ட்டவராக அறிவிக்கப்படுவரென அறிவிக்கபப்ட்டது. அதற்கு எதிராக யூதர்களின் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ‘மௌனம் எனும் குற்றம்’ புரிந்தவர் அவர் என்று யூத அமைப்புகளும் அறிஞர்களும் குற்றம் சாட்டினார்கள். 1999 ல் ஜான் கார்ன்வெல் ‘ஹிட்லரின் பாப்பரசர் [John Cornwell,Hitler's Pop] என்ற நூலில் பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் ஹிட்லர் அதிகாரத்துக்கு வருவதற்கே உதவினார் என்றும் ஹிட்லருடன் அவருக்கு நெருக்கமான உறவிருந்தது என்றும் அவர் ஒரு யூத வெறுப்பாளராக இருந்தார் என்றும் சொல்கிறார். அந்த நூலை வாத்திகன் அவதூறு என்று நிராகரித்தது.கடுமையான எதிர்ப்பு உருவானபோதும்கூட பாப்பரசர் தவறிழைக்கவில்லை என்ற நிலைபாட்டையே வாத்திகன் எடுத்தது.
ஆனால் யூத ஆய்வாளர்கள் வரலாற்றில் இருந்து தொடர்ச்சியாக ஆதாரங்களை முன்வைக்க ஆரம்பித்தபோது வேறு வழியில்லாமல் திருச்சபை அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக 2008 அக்டோபர் மாதம் அறிவித்தது. பாப்பரசர் குறித்த அக்கால ஆவணங்களை மீண்டும் பரிசோதனை செய்தபின்னரே முடிவெடுக்கப் போவதாக இப்போதைய பாப்பரசர் அறிவித்திருக்கிறார்.
*
இந்நாடகத்தைப்பற்றியும், பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸின் மௌனம் குறித்தும் இப்போது இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. யூதர்களும் இடதுசாரிகளும் பொதுவான வரலாற்றாசிரியர்களும் பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸை தன் சுயநலம் பேணும்பொருட்டு மௌனமாக இருந்தார் என்றே சொல்கின்றனர். கத்தோலிக்க தரப்பு அவர் புனிதர் என்று வாதிடுகிறது. அந்த விவாதங்களுக்குள் விரிவாகச் செல்ல நான் விரும்பவில்லை.
பொதுவாக இந்நாடகம் இப்போது சுருக்கப்பட்ட வடிவிலேயே கிடைக்கிறது. நான் வாசித்து இக்கட்டுரையில் சொல்லியிருக்கும் வடிவம் எழுபதுகளில் பிரசுரமாகியது.
இந்த நாடகம் முன்வைக்கும் கேள்விகளை நாம் பல்வேறு வகையில் எதிர்கொள்ளலாம். அதில் ஒன்று பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் என்ன செய்திருக்க வேண்டும் என்பது. பாப்பரசர் சொல்லியிருந்தால் ஹிட்லர் கேட்டிருக்க மாட்டார் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் நாஜிகளில் தொண்ணூறு சதவீதம்பேரும் தீவிரமான கத்தோலிக்கர்கள் என்பதனால் ஹிட்லர் அவரது சொற்களை நிராகரித்துவிடமுடியாதென வாதிடப்படுகிறது.
அதேபோல , பாப்பரசர் மதத்துடன் தொடர்பில்லாத விஷயங்களில் பேசாமலிருந்ததே சரி என்பவர்கள் உண்டு. உலகப்போரே கத்தோலிக்கர்கள் நடுவேதான் நடந்தது என்னும்போது பாப்பரசர் என்ன செய்திருக்க முடியும் என்பவர்கள் உண்டு. ஆனால் யூத அழிவு என்பது போர் அல்ல. அது மானுடப்பிரச்சினை. அதில் தெரிந்தும் பாப்பரசர் மௌனம் சாதித்தார் என்பது மாபெரும் அறவழுவே என்றும் மாற்றுத்தரப்பால் வாதிடப்படுகிறது.
இங்கே மேலும் வலுவான பல வினாக்களுக்கு இடமிருக்கிறது என்று இந்நாடகத்தை விமரிசித்தவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்நாடகம் பாப்பரசரை அல்ல, கடவுளைத்தான் நிராகரிக்கிறது என்று சொல்லப்பட்டது. அது உண்மை. கோடானுகோடிபேர் அநீதியாகக் கொல்லப்பட்டபோது கடவுளும்தானே மௌனமாக இருந்தார். எத்தனை லட்சம் ஆத்மாக்கள் கடவுளே என்று கதறியிருக்கும். பாப்பரசரின் அதே மௌனம்தானே கிறித்தவ யூத இஸ்லாமியக் கடவுள்களிலும் இருந்தது?
கிட்டத்தட்ட பாப்பரசரின் இடத்தில்தான் அன்றைய பல அறிவுஜீவிகளும் இருந்திருக்கிறார்கள். மௌனம் சாதிப்பதே மேல் என்ற முடிவு அன்று பொதுவாகவே இருந்திருக்கிறது. எஸ்ராபவுன்ட் போன்ற ஐரோப்பொய அறிவுஜீகள் ஹிட்லரை ஆதரித்திருக்கிறார்கள். ஏன் யூத பெரும்புள்ளிகளே மௌனம் சாதித்திருக்கிறார்கள்.
ஹிட்லர் கடைசியில் வீழ்ந்தார், ஆனால் அவரை வீழ்த்தியவர்கள் மானுட அறத்தின் பேரால் அவரை வீழ்த்தவில்லை. தங்களை வெல்லவரும் தங்களைப்போன்ற ஒரு பூதம் என்று அவரை மதிப்பிட்டதனாலேயே அவர் அழிக்கப்பட்டார். அவரை வென்ற அமெரிக்கா ஜப்பானில் அப்பாவி மக்கள் மேல் அணுகுண்டை வீசி ஹிட்லர் ஐந்துவருடத்தில் செய்த அந்த பெரும்படுகொலையை ஐந்தே நிமிடத்தில் செய்தது. ருஷ்யா அதற்க்குப்பின் மேலும் ஐம்பதுவருடம் கட்டாய உழைப்புமுகாம்களை வைத்திருந்தது. அதைவிட அதிகமான எளிய மக்களை அங்கே கொண்டுசென்று கொன்று ஒழித்தது.
ஆம், கடவுளும் கடவுளின் பிரதிநிதியும் மட்டுமல்ல மானுடமனசாட்சி என்று சொல்கிறோமே அதுவும்தான் மௌனமாக இருந்தது. மானுடத்தின் சாரமான அற எழுச்சி யூதர்களைக் காக்க வரவில்லை என்ற உண்மை கண்முன் மலை போல நின்றதைக் கண்டபின்னரே உலகில் இருத்தலியல் பிறந்தது.
இந்நாடகம் இன்னொரு தளத்திலும் விளக்கப்படுகிறது. இந்நாடகம் பற்றிய எங்கள் உரையாடலில் நித்ய சைதன்ய யதி இதைச் சொன்னார். பாப்பரசர் ஒரு நிறுவனத்தின் அதிபர். ஆகவே அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ நிலைபாட்டையே அவர் எடுக்க முடியும். யூதர்களின் நிலை கண்டு அவரும்தான் வருந்துகிறார். ஆனால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதேதான் வானொலியை விட்டுத்தர மறுத்த மடாலயத்தலைவரின் நிலையும். அவரால் அமைப்பை மீறமுடியாது. அமைப்புகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டவர்கள் அவர்கள்.
கத்தோலிக்கர்களில் அனேகமாக அனைவருமே கம்யூனிச அபாயத்தால் திருச்சபைக்கு ஆபத்து என்ற நிலைபாட்டை எடுப்பதைச் சுட்டிக்காட்டும் நித்யா அதேபோல வேறுவகை நிலைபாட்டையே எந்த மதமும் எடுத்திருக்கும் என்கிறார். அங்கே இந்து கிறித்தவம் பௌத்தம் என எந்த மதமும் விதிவிலக்காக இருக்காது.
ஜெர்மனிய மக்களில் அனைவருமே ஈவிரக்கமற்றக் கொலைகாரர்களா என்ன? இல்லை. அவர்களும் சாதாரண மனிதர்களே. ஆனால் அவர்கள் முழுக்கமுழுக்க அமைப்பைச் சார்ந்திருந்தார்கள். அந்த அமைப்பு தீமையைச் செய்ய ஆரம்பித்தபோது அவர்களும் அதைச் செய்தார்கள். அந்த அமைப்பை மீறிச்சென்று தனிமனிதர்களாகச் சிந்தனைசெய்தவர்களே ரிக்கார்டோ ·பொண்டானா, கர்ட் கர்ஸ்டைன் போன்றவர்கள். அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் துரோகிகள் என்பதைக் கவனிக்கலாம்.
இந்த விஷயத்தில் கத்தோலிக்கராக தன்னை உணரும் ஒருவர் பாபரசர் பன்னிரண்டாம் பயஸ் அவர்களை நியாயப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதைக் கவனித்தால் இது தெளிவாகும். ஒரு திரளாக மனிதர்கள் சிந்திக்கும்போது தன் திரளின் நலம் மட்டுமே திரண்டு வரமுடியும் என்கிறார் நித்யா.அமைப்புமனிதர்கள் அன்பின்,கனிவின் தளத்தில் சிந்திக்க முடியாது. பெரும் இன மதக் கலவரங்களில் எளியமக்கள் மனிதாபிமானத்தை இழந்து சொல்லரும் கொடுமைகளைச் செய்வது இதனாலேயே. முன்பின் தெரியாத ஒருவனைக் கொல்ல அவர்களால் முடிவதன் உளவியலே இதுதான்.
மனிதாபிமானம் என்பது ஒருவன் தனிமனிதனாக தன் அந்தரங்கத்தில் உணரக்கூடிய ஒன்று. மனிதர்கள் தனிமனிதர்களாக மட்டுமே தங்கள் ஆன்மீக ஆழத்தைக் கண்டடையவும் தங்கள் முழுமையையும் மீட்¨ப்பம் அடையமுடியும் என்று சொல்லும் நித்யா கூட்டான மக்கள்திரள் என்பது லௌகீகமான சுயலாபத்தை அடைவதற்கு மட்டுமே உரியது என்று சொல்கிறார்.
பொருத்தமான உதராணமாக எனக்குத்தோன்றுவது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஹிட்லரின் யூதப்படுகொலைகள் பற்றி அவருக்கு முற்றிலும் தெரியாதென இப்போது சொல்லப்படுகிறது. அது பொய். பல ஆவணங்களில் அவருக்கு அதுதெரியும் என்றும் ஆனால் பொருட்படுத்தவில்லை என்றும் தெளிவாக தெரிகிறது. மேலும் ஜப்பானியர்கள் சீனாவிலும் தைவானிலும் பிலிப்பைன்சிலும் சயாமிலும் நடத்திய கொலைவெறியாட்டத்தை அவர் நேர்சாட்சியாகவே கண்டார். ஆனால் அவர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காரணம் அவரது இலட்சியம் இந்திய விடுதலை.பலம் பொருந்திய பிரிட்டிஷாரை வெல்ல அந்த சமரசம் தேவை என்று அவர் எண்ணினார். கம்யூனிஸ்டுகளை வெல்ல ஹிட்லர் தேவை என பாப்பரசர் எண்ணியதுபோல. ஆகவே அவர் ஹிட்லரின் உளவுத்துறையின் உதவியை ஏற்றுக்கொண்டார். அவர்கள் உதவியுடன் தப்பி ஜெர்மனியில் ஹிட்லரின் விருந்தினரானர். ஜப்பானின் நண்பரானார். ராணுவ ஒத்துழைபபளரானார். இந்தச் சந்தர்ப்பங்களில் அவர் நேரில் அறிந்த மானுடப்படுகொலைகளுக்குமுன் நேதாஜி மௌனத்தையே கடைப்பிடித்தார்.
ஆனால் பிரிட்டிஷாருக்கு எதிராக கடைசிப்போராட்டத்தை நடத்தியபோதிலும்கூட காந்தி ஹிட்லரை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் காந்திக்கு ஹிட்லர் செய்துவந்த இனப்படுகொலைகளைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவரது மனசாட்சி ஹிட்லரை ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதற்காக அப்போது காந்தி காங்கிரஸ்காரர்களால் கடுமையாக வசைபாடப்பட்டதுண்டு.
ஆனால் அந்த மனசாட்சியால்தான் பெரும் வரலாற்றுப் பாவத்தின் கறை இல்லாமல் இந்தியா என்ற நாடு உருவாக முடிந்தது. சுபாஷ் சந்திரபோஸ் அமைப்புமனிதராக சிந்தனைசெய்தார். காந்தி அவரது அனைத்து முடிவுகளையும் அமைப்புக்கு அப்பால்சென்று தனிமனிதராக முடிவுசெய்தார். ஆகவே சுபாஷிடம் இருந்த தர்க்கத்தெளிவு காந்தியிடம் இருக்கவில்லை. ஆனால் சுபாஷிடம் இல்லாத மனசாட்சியின் குரல் இருந்தது.
இந்த விஷயத்துக்கு தொடர்ச்சியாகச் சொல்லப்பட வேண்டியது யூதர்களின் பிற்கால வரலாறு. அது இந்நாடகத்தை எழுதிய ரால்·ப் ஹொஷ¥த் ஊகித்திருக்க முடியாத விஷயம். யூதர்கள் கடும் அடக்குமுறைக்கும் இன ஒதுக்குதலுக்கும் உள்ளானார்கள். ஆகவே அவர்கள் பின்பு அமைப்பாகத்திரண்டார்கள். தங்களுக்கான நாடு ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் அகிம்சையையோ மனிதாபிமானத்தையோ நம்பும் நாடாக உருவாகவில்லை. பிறர்மீது அடக்குமுறையை ஏவ சற்றும் தயங்காத நாடாகவே உருப்பெற்றிருக்கிறார்கள். அமைப்புமனிதர்களால் அழிக்கப்பட்டவர்கள் அமைப்பு மனிதர்களாக ஆனார்கள்.
கார்ல் ஜாஸ்பெர்ஸ் இந்த நாடகத்தைப்பற்றி விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார். ‘குற்றகரமான மௌனம்’ என்ற அவரது பிரபலமான கோட்பாடு இந்நாடகத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் இருந்து உருவானதே. அநீதிக்கு முன் எதிர்த்துப்போராடாமல் மௌனம் சாதிப்பதும் அநீதியே ஆகும் என்று கார்ல் ஜாஸ்பெர்ஸ் வாதிடுகிறார். அநீதி ஒருவேளை வெல்லப்படாது போகலாம், ஆனால் எதிர்க்கப்படாத அநீதி என்பது நிறுவப்பட்ட அநீதியாகும். வெல்லப்படாத அநீதி நிகழ்காலத்தை அழிக்கக்கூடியதென்றால் எதிர்க்கப்படாத அநீதி எதிர்காலத்தையும் அழிக்கக்கூடியது.
இந்நாடகத்தை ஒட்டி சிந்திக்கும்போது இன்று இன்னொரு சிந்தனையும் மனதில் எழுகிறது. ஹிட்லரின் இன அழித்தொழிப்பு, அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சு, ருஷ்யாவின் குளக்குகள் அழிப்பு ஆகியமூன்றில் எது கொடுமையானது? மூன்றுமே மாபெரும் மானுட அழிவுகள்தானே? இந்நாடகத்தில் வரும் அந்த டாக்டரைப்போன்றவர்கள்தானே அணுகுண்டை தயாரித்த அறிவியலாளர்கள்? ஐம்பதுவருடம் ருஷ்யாவின் மானுடப்படுகொலையை நியாயப்படுத்திய நம்முடைய இடதுசாரிக் கோட்பாட்டாளர்கள்?
இதேபோல பெரும் படுகொலைகள் கிழக்கில் நடந்துள்ளன. சீனாவில் ஜப்பானிய ராணுவம் நடத்திய நான்கிங் படுகொலைகள் ஓர் உதாரணம். அதுவாவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்ட ‘சயாம் மரண ரயில்பாதை’ போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் இடம்பெறவேயில்லை.
ஆனால் யூதப்படுகொலை மட்டும் பேரழிவாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. யூதர்களைக் கொன்ற நாஜிகளை நாம் மீண்டும் மீண்டும் வெறுக்கிறோம். அணுகுண்டு வீசிய அமெரிக்கர்களை மறந்தே விட்டோம். ஏன்? காரணம் ஒன்றுதான் போரில் ஹிட்லர் தோற்றார். வென்றவர்கள் எழுதிய வரலாறு நாம் படிப்பது
ஹிட்லர் வென்றிருந்தால் என்ன ஆகும்? யூதப்படுகொலைகள் வரலாற்றில் இருந்து மறைந்து போயிருக்குமா? இருக்காது. ஆனால் இன்றுள்ள இந்த முக்கியத்துவம் இன்றி புதைந்து கிடந்திருக்கும். அறிவுஜீவிகளும் வரலாற்றாசிரியர்களும் அதை நியாயப்படுத்தியிருப்பார்கள். பாப்பரசரின் மௌனத்தை வரலாறும் கைகொண்டிருக்கும்.
ஆகவே இங்கும் தனிமனிதர்களாக நிற்பதே தேவையாகிறது. வரலாற்று மௌனங்களுக்கு அதீதமாக தன் தனிப்பட்ட நோக்கைக் கொண்டு தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக.
சில பொது இணைப்புகள்
http://www.catholicleague.org/research/deputy.htm
http://www.ansa.it/site/notizie/awnplus/english/news/2008-11-06_106276837.html
http://www.piusxiipope.info/
http://www.jpost.com/servlet/Satellite?cid=1225199611398&pagename=JPost%2FJPArticle%

jeyamohan's view on hitler

ஆகவே இங்கும் தனிமனிதர்களாக நிற்பதே தேவையாகிறது. வரலாற்று மௌனங்களுக்கு அதீதமாக தன் தனிப்பட்ட நோக்கைக் கொண்டு தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக.Jeyamohan

hitler and devil
ஹிட்லர் கடைசியில் வீழ்ந்தார், ஆனால் அவரை வீழ்த்தியவர்கள் மானுட அறத்தின் பேரால் அவரை வீழ்த்தவில்லை. தங்களை வெல்லவரும் தங்களைப்போன்ற ஒரு பூதம் என்று அவரை மதிப்பிட்டதனாலேயே அவர் அழிக்கப்பட்டார். அவரை வென்ற அமெரிக்கா ஜப்பானில் அப்பாவி மக்கள் மேல் அணுகுண்டை வீசி ஹிட்லர் ஐந்துவருடத்தில் செய்த அந்த பெரும்படுகொலையை ஐந்தே நிமிடத்தில் செய்தது. ருஷ்யா அதற்க்குப்பின் மேலும் ஐம்பதுவருடம் கட்டாய உழைப்புமுகாம்களை வைத்திருந்தது. அதைவிட அதிகமான எளிய மக்களை அங்கே கொண்டுசென்று கொன்று ஒழித்தது.
ஆம், கடவுளும் கடவுளின் பிரதிநிதியும் மட்டுமல்ல மானுடமனசாட்சி என்று சொல்கிறோமே அதுவும்தான் மௌனமாக இருந்தது. மானுடத்தின் சாரமான அற எழுச்சி யூதர்களைக் காக்க வரவில்லை என்ற உண்மை கண்முன் மலை போல நின்றதைக் கண்டபின்னரே உலகில் இருத்தலியல் பிறந்தது.
ஆம், கடவுளும் கடவுளின் பிரதிநிதியும் மட்டுமல்ல மானுடமனசாட்சி என்று சொல்கிறோமே அதுவும்தான் மௌனமாக இருந்தது. மானுடத்தின் சாரமான அற எழுச்சி யூதர்களைக் காக்க வரவில்லை என்ற உண்மை கண்முன் மலை போல நின்றதைக் கண்டபின்னரே உலகில் இருத்தலியல் பிறந்தது.
Subscribe to:
Posts (Atom)